வியாழன், 25 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (19:19 IST)

சசிகலா குற்றவாளி: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

சசிகலா குற்றவாளி: உச்ச நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு!

தமிழகம் மாட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 3 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு வெளியாகி உள்ளது. இதில் சசிகலா உள்ளிட்ட நான்கு பேரும் குற்றவாளிகள் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர்.


 
 
உச்ச நீதிமன்ற நீதிபதிகள் பினாக்கி சந்திரகோஷ், அமித்வா ராய் நீதிபதிகள் அடங்கிய அமர்வு இந்த தீர்ப்பை வழங்கி உள்ளது. இந்த தீர்ப்பு தமிழகத்தின் அரசியல் எதிர்காலத்தை தீர்மானிக்க தீர்ப்பு என்பதால் மிகுந்த எதிர்பார்ப்பு நிலவியது.
 
1991-96-ஆம் ஆண்டு வரை அதிமுக ஆட்சியில், வருமானத்துக்கு அதிகமாக சொத்து குவித்ததாக ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. ஆட்சி அதிகாரத்தை பிடிக்க போட்டி நடந்துக் கொண்டிருக்கும் இந்த சூழலில் சசிகலா மீதான சொத்து வழக்கில் இன்று தீர்ப்பு வழங்கப்பட இருந்ததால் தமிழக மக்கள் இதனை தான் பெரிதும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருந்தனர்.
 
இந்நிலையில் இந்த தீர்ப்பில் சசிகலா குற்றவாளி என நீதிமன்ற தீர்ப்பு வழங்கியதால் சசிகலா முதல்வராக பதவியேற்க முடியாது என்பது உறுதியாகி உள்ளது. இந்த வழக்கில் சசிகலா உள்ளிட்ட 3 பேருக்கும் 4 ஆண்டுகள் சிறை மற்றும் 10 கோடி ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. கீழ் நீதிமன்ற நீதிபதி குன்ஹாவின் தீர்ப்பை உறுதி செய்துள்ளனர்.