30 வருடமாக ஜெயலலிதாவை ஏமாற்றி வந்தார் சசிகலா?: தீபா காட்டம்!

30 வருடமாக ஜெயலலிதாவை ஏமாற்றி வந்தார் சசிகலா?: தீபா காட்டம்!


Caston| Last Modified சனி, 24 டிசம்பர் 2016 (09:39 IST)
தமிழக முதல்வராக இருந்த ஜெயலலிதாவின் மரணத்திற்கு பின்னர் அவரது அண்ணன் மகள் தீபா ஜெயலலிதாவின் தோழி சசிகலா மீது அடுக்கடுக்காக பல குற்றச்சாட்டுகளை வைத்து வருகிறார்.

 
 
ஜெயலலிதா மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட சமயத்தில் இருந்தே சசிகலா மீது தனது எதிர்ப்பை பதிவு செய்து வருகிறார் தீபா. இந்நிலையில் தீபா மீது ஊடகங்களின் பார்வை விழுந்தது. அவர் ஜெயலலிதாவின் இரத்த உறவு என்பதால் அவரது குற்றச்சாட்டுகள் பரவலாக பேசப்பட்டது. அது ஊடகங்களில் விவாத பொருளாக கூட மாறியது.
 
இந்நிலையில் பிரபல தமிழ் தொலைக்காட்சி தீபாவை பேட்டி எடுத்தது. இந்த பேட்டியை குறிப்பிட்ட தேதியில் ஒளிபரப்பாததால் அது சர்ச்சையை ஏற்படுத்தியது. சசிகலா தரப்பு இதில் தலையிட்டதாக கூறப்பட்டது. சசிகலா தரப்புக்கு அந்த பேட்டி போட்டுக்காட்டப்பட்டு அவர் அனுமதித்ததை மட்டும் தான் ஒளிபரப்பினார்கள் என்ற பேச்சும் நிலவி வந்தது.
 
இந்த பேட்டியில் தீபா, என்னை எனது அத்தையிடம் நெருங்க விடாமல் சிலர் தடுத்தனர் என கூற, குறுக்கிட்ட தொகுப்பாளர் தீபா, உங்களை ஏமாற்றுவது பெரிய காரியம் அல்ல, ஆனால் ஜெயலலிதாவை சுலபமாக ஏமாற்ற முடியுமா என கேட்டார்.
 
இதற்கு பதில் அளித்த தீபா, அவர்கள் தீபாவை ஏமாற்றவில்லை. தீபாவை அவர்கள் ஏமாற்றவும் முடியாது. அத்தையை தான் ஏமாற்றி வந்தனர். சுமார் 30 வருடங்களாக ஏமாற்றி வந்தனர் என அதிரடியாக கூறினார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :