1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : திங்கள், 30 ஜனவரி 2023 (17:22 IST)

அதிமுக பொதுச்செயலாளர் பதவி: சுப்ரீம் கோர்ட்டில் சசிகலா கேவியட் மனு!

sasikala
அதிமுக பொதுச்செயலாளர் பதவி குறித்த வழக்கு உச்சநீதிமன்றத்தில் நடைபெற்று வரும் நிலையில் உச்சநீதிமன்றத்தில் சசிகலா கேவியட்  மனு தாக்கல் செய்துள்ளார். 
 
அதிமுக பொதுச் செயலாளர் பதவி தொடர்பாக எடப்பாடி பழனிசரப்பு மேல்முறையீடு செய்தால் தனது கருத்தையும் கேட்க வேண்டும் என உச்ச நீதிமன்றத்தில் சசிகலா கேவியட் மனு தாக்கல் செய்துள்ளார். 
 
பொதுச் செயலாளர் பதவியில் இருந்து சசிகலா நீக்கப்பட்டதை எதிர்த்து தொடரப்பட்ட வழக்கு சென்னை உயர்நீதிமன்றத்தில் நிலுவையில் உள்ள நிலையில் தற்போது சசிகலா உச்சநீதிமன்றத்தில் செய்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Siva