வெள்ளி, 29 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Modified: செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (11:06 IST)

குற்றவாளி என தீர்ப்பு - சசிகலா முதல்வர் ஆக முடியுமா?

சொத்துக்குவிப்பு வழக்கில் குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்ட சூழ்நிலையில், சசிகலா முதல்வர் ஆக முடியுமா என்ற கேள்வி எழுந்துள்ளது..


 

 
தமிழகம் மாட்டுமல்லாமல் ஒட்டுமொத்த நாடே எதிர்பார்த்துக் கொண்டிருந்த ஜெயலலிதா, சசிகலா உள்ளிட்ட 4 பேர் மீதான சொத்துக்குவிப்பு வழக்கின் மேல்முறையீட்டு மனுவின் தீர்ப்பு வெளியாகி உள்ளது. 
 
இதில் சசிகலா உள்ளிட்ட 3 பேரும் குற்றவாளிகள் என நீதிபதிகள் அறிவித்துள்ளனர். மேலும், சசிகலா உள்ளிட்ட அனைவருக்கும் ரூ.10 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், 4 வாரத்திற்குள் சரண் அடைய வேண்டும் என அவர்கள் கூறியுள்ளனர்.  ஜெ. மரணமடைந்து விட்டதால் அவர் இந்த வழக்கிலிருந்து விடுவிக்கப்பட்டார். 
 
எனவே, குற்றவாளி என தீர்ப்பளிக்கப்பட்டு விட்டதால் அவர் இன்னும் 10 வருடங்களுக்கு அரசியலில் ஈடுபட முடியாது என்பது தெரிய வந்துள்ளது...எனவே அவரின் அரசியல் ஆசை இந்த தீர்ப்பின் மூலம் முடிவிற்கு வந்துள்ளது..