ஜெ. விவகாரத்தில் பாஜகவினரை விலைக்கு வாங்கிய சசிகலா?: போட்டுடைத்த பெண்!

ஜெ. விவகாரத்தில் பாஜகவினரை விலைக்கு வாங்கிய சசிகலா?: போட்டுடைத்த பெண்!


Caston| Last Modified சனி, 24 டிசம்பர் 2016 (15:47 IST)
தமிழக முன்னாள் முதல்வர் ஜெயலலிதா மரணத்தில் சந்தேகம் இருப்பதாக அவரது தோழி கீதா நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்துள்ளார். ஜெயலலிதா மரணம் குறித்து கீதா சொல்லும் தகவல் ஒவ்வொன்றும் பகீர் ரகம்.

 
 
ஜெயலலிதா மரணமடைந்ததை அடுத்து அதிமுகவின் அடுத்த பொதுச்செயலாளராக சசிகலா வர வேண்டும் என அந்த கட்சியின் மூத்த நிர்வாகிகள் ஆதரவு வழங்கி வருகின்றனர். இந்நிலையில் பதவிக்கு ஆசைப்பட்டு அமைச்சர்கள் சின்னம்மா என கூவுவதாக முன்னாள் அதிமுக எம்எல்ஏ ஒருவர் கூறி சர்ச்சையை ஏற்படுத்தினார்.
 
இந்நிலையில் ஜெயலலிதாவின் மரணத்தில் சந்தேகம் இருப்பதாக வழக்கு தொடர்ந்துள்ள அவரது தோழி கீதா அளித்த பேட்டியில் ஜெயலலிதா கொலை செய்யப்பட்டதற்கான 100 சதவீதம் வாய்ப்பு உள்ளது என்றார். மேலும் வழக்கு தொடர்ந்துள்ளதால் உங்களுக்கு மிரட்டல்கள் ஏதாவது வருகிறதா என கேட்கப்பட்டது.
 
அதற்கு பதில் அளித்த அவர் என்னுடைய முகவரி நம்பர் அவர்களுக்கு தெரியாது என கூறினார். என் மேல் கைவைத்தால் அவர்களுக்கு தான் பாதிப்பு என்றார். மேலும் எனக்கு போன் செய்த பாஜகவை சேர்ந்த ஒருவர் கூறும் போது பாஜகவினர் பலரை சசிகலா விலைக்கு வாங்கிவிட்டதாக கூறினார் என கீதா அந்த பேட்டியில் கூறியுள்ளார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :