சொத்து குவிப்பு வழக்கு நாளை தீர்ப்பு: சசிகலாவின் கனவு நிறைவேறுமா?
சசிகலா மீதான சொத்து குவிப்பு வழக்கில் நாளை காலை 10.30 மணிக்கு உச்சநீதிமன்றத்தில் தீர்ப்பு வழங்கப்படவுள்ளது. இந்த வழக்கில் நீதிபதிகள் பினாமி சந்திரகோஷ், அமிதவராய் ஆகியோர் தீர்ர்பு வழங்க உள்ளனர்.
1991-96 வரை அதிமுக ஆட்சியில், வருமானத்துக்கு அதிகமாக ரூ.66 கோடி சொத்து குவித்ததாக ஜெயலலிதா, சசிகலா உள்பட 4 பேர் மீது வழக்கு தொடரப்பட்டது. இந்த வழக்கில் நாளை தீர்ப்பு வரவுள்ளது. ஜெயலலிதா உயிரிழந்ததால், அவரது பெயரை நீக்கக்கோரி மனு வழங்கப்பட்டுள்ளது.
ஆட்சியை அதிகாரத்தை பிடிக்க போட்டி நடந்துக் கொண்டிருக்கும் இந்நிலையில் சசிகலா மீதான சொத்து வழக்கில் நாளை தீர்ப்பு வழங்கப்பட உள்ளது. தமிழக மக்கள் இதனை தான் பெரிதும் எதிர்ப்பார்த்துக் கொண்டிருக்கின்றனர்.
இந்த தீர்ப்புக்காக ஆளுநரும் காத்துக் கொண்டிருப்பதாக தகவல்கள் வெளியாகியுள்ளது. நாளை சொத்து குவிப்பு வழக்கில் சசிகலாவுக்கு எதிராக தீர்ப்பு வழங்கப்பட்டால் தமிழக அரசியல் சூழலில் மேலும் பரபரப்பு அதிகரிக்கும் என்பது குறிப்பிடத்தக்கது.
இந்த தீர்ப்புக்கு பின் தமிழக அரசியல் சூழல் எப்படி இருக்கும்? என்று எல்லொரும் ஆவலோடு உள்ளனர். இந்த தீர்ப்பு தமிழகத்தின் தலையெழுத்தை மாற்றக்கூடிய தீர்ப்பாக கருதப்படுகிறது. இதில்தான் சசிகலா அரசியல் வாழ்க்கை அடங்கியுள்ளது.