1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Murugan
Last Updated : புதன், 21 ஜூன் 2017 (11:48 IST)

அந்நிய செலவாணி வழக்கு : எழும்பூர் நீதிமன்ற விசாரணைக்கு ஆஜராகும் சசிகலா

எழும்பூர் நீதிமன்றத்தில் தொடரப்பட்ட அந்நிய செலவாணி வழக்கு தொடர்பான விசாரணையில்,  இன்று வீடியோ கான்பரன்சிங் மூலம் அதிமுக பொதுச்செயலாளர் சசிகலா ஆஜராகிறார்.


 

 
1996-97ம் ஆண்டு, ஜெ.ஜெ. தொலைகாட்சிக்கு வெளிநாடுகளில் இருந்து பொருட்கள் வாங்கியது தொடர்பாக சசிகலா, பாஸ்கரன், சுதாகரன், தினகரன் ஆகிய 4 பேர் மீதும் அமலாக்கத்துறை வழக்குப்பதிவு செய்தது.
 
இந்த வழக்கில் ஏற்கனவே பாஸ்கரன், தினகரன் ஆகியோர் ஆஜராகிவிட்டனர். இதில் பெங்களூர் சிறையில் இருக்கும் திவாகரனை நேற்று எழும்பூர் நீதிமன்றத்தில் போலீசார் ஆஜர் படுத்தினர். அதேபோல், சசிகலாவிடமும் விசாரணை செய்ய வேண்டும் என நீதிபதிகள் விரும்பினர்.
 
ஆனால், அவரின் உடல்நிலையை கருத்தில் கொண்டு, அவரை வீடியோ கான்பிரன்சிங் மூலம் விசாரணை நடத்த வேண்டும் என அவரின் வழக்கறிஞர் அனுமதி கேட்டார். அதன் பேரில், இன்று மதியம் 12 மணியளவில் சசிகலாவிடம் விசாரணை நடத்தப்படும் எனத் தெரிகிறது.