Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

உச்சக்கட்ட விரக்தியிலும் கண்ணீரிலும் பிரிந்த சசிகலாவும் தினகரனும்!

உச்சக்கட்ட விரக்தியிலும் கண்ணீரிலும் பிரிந்த சசிகலாவும் தினகரனும்!


Caston| Last Modified வியாழன், 3 ஆகஸ்ட் 2017 (12:50 IST)
அதிமுகவில் பரபரப்பான சூழல் நிலவி வரும் வேளையில் நேற்று சிறையில் உள்ள சசிகலாவை சந்திக்க சென்றார் டிடிவி தினகரன். இந்த சந்திப்புக்கு பின்னர் சசிகலாவும் தினகரனும் உச்சக்கட்ட விரக்தியிலும், கண்ணீரிலும் பிரிந்ததாக கூறப்படுகிறது.

 
 
சசிகலா குடும்பத்தை அதிமுகவில் இருந்து முழுவதுமாக அகற்றிவிட்டு கட்சியை வழிநடத்த ஓபிஎஸ்ஸும், ஆட்சியை வழி நடத்த எடப்பாடியும் இருக்கட்டும் என பாஜக் திட்டமிட்டு அதிமுகவின் இரு அணிகளையும் இயக்கி வருவதாக கூறப்படுகிறது.
 
ஆட்சிக்கு எந்த தடையும் இல்லாததால் எடப்பாடி பாஜகவிடம் சரண்டராகியுள்ளதாக கூறப்படுகிறது. இதனை எல்லாம் அறிந்த தினகரன் தரப்பு கடந்த சில தினங்களாக சீற்றத்தில் உள்ளது. இதனால் தான் இன்று சசிகலாவை சந்திக்க திட்டமிட்டிருந்த தினகரன் நேற்று அவசர அவசரமாக சசிகலாவை சந்திக்க சிறைக்கு சென்றார்.
 
இதற்காக சிறப்பு அனுமதி பெற்று அவர் சசிகலாவை சந்தித்துள்ளார். ஒரு மணி நேரம் இவர்கள் இருவரது சந்திப்பு நடந்துள்ளது. இந்த சந்திப்பின் போது நம்பியவர்கள் அனைவரும் எதிராக திரும்பியது குறித்து சசிகலா ஆவேசப்பட்டு அழுதுள்ளார்.
 
கடந்த சில நாட்களாக நடந்த அனைத்து விஷயங்களையும் சசிகலாவிடம் கூறியுள்ளார் தினகரன். இனிமேல் பொறுமையாக இருக்க போவதில்லை எனவும், எந்த பிரச்சனை வந்தாலும் கட்சி பணிகளில் தீவிரமாக இறங்குவேன் எனவும் சசிகலாவிடம் தினகரன் கூறிவிட்டு வந்துள்ளார்.
 
இந்த சந்திப்பு முடிந்து இருவரும் பிரியும் போது மிகுந்த வருத்தத்தில் விரக்தியில் கண்ணீருடன் பிரிந்துள்ளதாக தகவல்கள் வருகின்றன.


இதில் மேலும் படிக்கவும் :