திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : செவ்வாய், 20 மார்ச் 2018 (18:21 IST)

சசிகலா புஷ்பாவின் புது கணவர் ஏற்கனவே திருமணமானவர்? : மனைவி பரபரப்பு புகார்

அதிமுக எம்.பி சசிகலா புஷ்பாவை திருமணம் செய்யப் போவதாக கூறப்படும்  டெல்லி ராமசாமி ஏற்கனவே திருமணமானவர் என செய்தி வெளியாகியுள்ளது. அதோடு, அவரின் முன்னாள் மனைவி சத்யபிரியா தனது குழந்தையுடன் மதுரை மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தில் முறையிட்டதாக செய்தியும், புகைப்படமும் வெளியாகியுள்ளது.

 
அ.தி.மு.க பொதுச் செயலாளர் ஜெயலலிதா மறைவைத் தொடர்ந்து கட்சியின் பொதுக்குழு, செயற்குழு கூட்டம் கடந்த ஆண்டு கூடியபோது, சசிகலா புஷ்பாவின் கணவர் லிங்கேஸ்வரா பொதுச்செயலாளர் பதவிக்கு சசிகலா புஷ்பா  போட்டியிடப் போவதாகக் கூறி அ.தி.மு.க தலைமை அலுவலகத்துக்கு மனுத்தாக்கல் செய்ய வந்தார். அப்போது அந்தக் கட்சியில் உள்ள நிர்வாகிகளுக்கும், சசிகலா புஷ்பாவின் கணவருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. தகராறு முற்றியதில் அவருடைய கணவர் தாக்கப்பட்டார். இதுதொடர்பாக காவல் நிலையத்திலும் வழக்குப்பதிவு செய்தனர்.

 
இந்த விவகாரத்துக்குப் பிறகு அரசியல் மற்றும் பிற விவகாரங்களிலிருந்து ஒதுங்கியே இருந்தார் சசிகலா புஷ்பா. இந்த நிலையில்தான் அவருக்கும் டெல்லியை சேர்ந்த ராமசாமி என்பவருக்கும் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. அவர்களுடைய பெயர்கள் இடம்பெற்ற திருமண அழைப்பிதழும் சமூக வலைதளங்களில் வைரலாகப் பரவி வருகிறது. டெல்லியில் வரும் 26-ம் தேதி ராமசாமி என்பவரை சசிகலா புஷ்பா  மணக்கப்போவதாக அந்த அழைப்பிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது. மாப்பிள்ளையான ராமசாமி ஓரியண்டல் இன்ஸ்டிடியூட் ஆஃப் டெக்னாலஜி பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராக உள்ளதாக குறிப்பிடப்பட்டுள்ளது. மேலும் அவர் நாடாளுமன்றத்தின் சட்ட ஆலோசகராக உள்ளதாவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. 

 
இந்நிலையில், மகாளிபட்டியிலிருந்து கைக்குழந்தையாயோடு வந்த சத்யப்பிரியா தமக்கும் சசிகலா புஷ்பா திருமணம் செய்ய உள்ளதாக இருந்த ராமசாமிக்கும் 2014ம் ஆண்டே திருமணம் நடைபெற்றது எனக்கூறி அதற்கான ஆதாரங்களை காண்பித்தார். மேலும், அவருடன் சேர்ந்து வாழ விரும்புவதாகவும் கண்ணீருடன் குறிப்பிட்டார். அதோடு, தனது கணவர் ராமசாமி சசிகலா புஷ்பாவை திருமணம் செய்யப்போவதாக வந்த தகவல்கள் உண்மைதானா என தனக்கு உறுதி செய்யப்பட வேண்டும் எனவும் அவர் கோரிக்கை வைத்தார்.
 
மேலும் ஒரு வருடம் தான் ராமசாமியாயோடு சேர்ந்து வாழ்ந்ததாகவும், அதன் பிறகு ஏற்பட்ட குடும்ப பிரச்சனையால் என்னை தந்தை வீட்டிற்கு அனுப்பி வைத்த அவர் செல்போன் மூலம் தன்னிடம் பேசி வந்ததாகவும் கூறிய சத்யபிரியா, அவரைப்பற்றி புதிய திருமண தகவல் செய்தி வெளியானது கண்டு அதிர்ச்சி அடைந்து, மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளிக்க வந்திருப்பதாகவும் கூறினார் .
 
இந்த விவகாரம் அங்கு பரபரப்பை ஏற்படுத்தியது.