திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Senthil Velan
Last Updated : திங்கள், 11 மார்ச் 2024 (13:32 IST)

அண்ணாமலையை சந்தித்த சரத்குமார்..! மோடியை மீண்டும் பிரதமராக்க உழைப்பேன்..!!

Sarathkumar Annamalai
மோடியை மீண்டும் பிரதமராக்க உழைப்பேன் என்று சமத்துவ மக்கள் கட்சி தலைவரும், நடிகருமான சரத்குமார் தெரிவித்துள்ளார்.
 
மக்களவை தேர்தல் நெருங்கும் நிலையில், கூட்டணி பேச்சு வார்த்தை தொகுதி பங்கீடு போன்ற பணிகளில் அரசியல் கட்சிகள் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன.
 
இந்நிலையில் சென்னை தி.நகரில் உள்ள பாஜக தலைமை அலுவலகத்தில் அண்ணாமலையை, சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தினார். தொகுதி பங்கீடு தொடர்பாக இருவரும் பேச்சுவார்த்தை நடத்தியதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.

பாஜக கூட்டணியில் இரண்டு தொகுதிகளை ஒதுக்க வேண்டும் என்று அண்ணாமலையிடம் சரத்குமார் வலியுறுத்தியதாகவும் சொல்லப்படுகிறது. சந்திப்புக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய சரத்குமார், அண்ணாமலை உள்ளிட்ட பாஜகவினரை மரியாதை நிமித்தமாக சந்தித்ததாக தெரிவித்தார்.


மத்தியில் பாஜக மீண்டும் ஆட்சி அமைக்கவும்,  மோடியை மீண்டும் பிரதமராக்க உழைப்பேன் எனவும் அவர் தெரிவித்தார். இன்னும் இரண்டு நாட்களில் கூட்டணி தொடர்பாக இறுதி செய்யப்படும் என்றும் சரத்குமார் கூறினார்.