ஒன்றிணைவோம் உடன்பிறப்புகளே! – சசிக்கலாவை சந்தித்த சரத்குமார்!
தமிழக சட்டமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள சரத்குமார், சசிக்கலாவை சந்தித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இன்று ஜெயலலிதா பிறந்தநாள் கொண்டாடப்படும் நிலையில் அவரது உருவப்படத்திற்கு மாலர்தூவி அவரது தோழி சசிக்கலா மரியாதை செலுத்தினார். பின்னர் பேசிய அவர் ஜெயலலிதாவின் உடன்பிறப்புகள் ஒன்றிணைந்து தேர்தலில் வெற்றிபெறுவோம் என கூறியிருந்தார்.
இந்நிலையில் சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் மற்றும் அவரது மனைவி ராதிகா ஆகியோர் இன்று சசிக்கலாவை நேரில் சென்று சந்தித்துள்ளனர். அதிமுகவுடன் கூட்டணியில் உள்ள சரத்குமார் சசிக்கலாவை சந்தித்துள்ளது சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. அதேசமயம் சசிக்கலா உடல்நலம் குறித்து விசாரிக்கவே சரத்குமார் சென்றுள்ளதாகவும் பேசிக்கொள்ளப்படுகிறது.