திங்கள், 30 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Caston
Last Updated : வியாழன், 10 ஆகஸ்ட் 2017 (12:01 IST)

தினகரனுக்கு டாட்டா காட்டிய சரத்குமார்: எடப்பாடி அணியில் ஐக்கியம்!

தினகரனுக்கு டாட்டா காட்டிய சரத்குமார்: எடப்பாடி அணியில் ஐக்கியம்!

அதிமுக இரண்டாக உடைந்தபோது சமத்துவ மக்கள் கட்சி தலைவரும் நடிகருமான சரத்குமார் அதிமுக துணைப் பொதுச்செயலாளரான டிடிவி தினகரனை சந்தித்து தனது ஆதரவை தெரிவித்தார். தொடர்ந்து தினகரன் ஆதரவாளராக இருந்து வந்த சரத்குமார் தற்போது அவருக்கு டாட்டா காட்டிவிட்டார்.


 
 
தினகரனுக்கும் எடப்படி அணியினருக்கும் இடையே விரிசல் ஏற்பட்டுள்ளதையடுத்து இரு அணியினரும் கட்சியையும் ஆட்சியையும் தங்கள் கட்டுப்பாட்டில் வைத்திருக்க முயற்சிக்கின்றனர். இதனையடுத்து எடப்பாடி அணியில் இருக்கும் எம்எல்ஏக்கள், நிர்வாகிகள் சிலர் தினகரனை சந்தித்து ஆதரவு தெரிவித்து வந்தனர்.
 
ஆனால் தினகரனுக்கு இதுநாள் வரை ஆதரவு தெரிவித்து வந்த சமத்துவ மக்கள் கட்சி தலைவர் சரத்குமார் இன்று காலை முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியை அவரது இல்லத்தில் சந்தித்து பேசியுள்ளார். இதனையடுத்து செய்தியாளர்களிடையே பேசிய சரத்குமார் மரியாதை நிமித்தமாக முதல்வரை சந்தித்ததாக கூறினார்.
 
மேலும் அதிமுகவில் அனைத்து அணியினரும் ஒன்றிணைந்து ஒற்றுமையாக இருந்து மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் வழியில் ஆட்சியை தொடர வேண்டும் என்று தான் விரும்புவதாக கூறினார். தொடர்ந்து சசிகலா, தினகரனின் ஆதரவாளராகவே இருந்து வந்த சரத்குமார் இன்று திடீரென எடப்பாடி பழனிசாமி அணிக்கு தாவியுள்ளது தினகரன் அணிக்கு அதிர்ச்சியை அளித்துள்ளது.