ஞாயிறு, 17 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj

சாம்சாங் நிறுவனத் தலைவர் ஊழல் புகாரில் கைது !

பிரபல சாம்சங் நிறுவனத் துணைத்தலைவர் அமெரிக்க டாலர் நிதி மோசடியில் ஈடுபட்டதாக  அந்நாட்டு நீதிமன்றம் 2 ½ ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துள்ளது.

உலக அளவில் மின்னணுத் தொழில்நுட்பத்தில் முன்னணி நிறுவனமாக சாம்சங் உள்ளது. இந்நிறுவனத்தின் செல்போன், லேப்டாப் உள்ளிட்ட பொருட்களுக்கு உலக அளவில் கோடிக்கணக்கான வாடிக்கையாளர்கள் உள்ளனர்.

இந்நிலையில், சமீபத்தில் இந்நிறுவத்தின் தலைவர் லீ காலமானார். இதையடுத்து லீயின் மகன்  ஜே ஒய் லீ இந்நிறுவத்தின் துணைத்தலைவராகப் பொறுப்பேற்றுக் கொண்டார்.

இவர் மீது லஞ்சம் மற்றும் பணம் மோசடி உள்ளிட்ட குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டன. இந்நிலையில் தற்போது இவர் மீதான ஊழல் குற்றச்சாட்டில் சிக்கிய இவர் மீது வழக்குத் தொடுக்கப்பட்ட நிலையில் சீயோல் நீதிமன்றம் இவ்வழக்கை விசாரித்த சியோல் நீதிமன்ற நீதிபதி அவருக்கு ஜே ஒய் லீக்கு(52) 2 ½ ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்துத் தீர்ப்பளித்துள்ளார்.