சேலம் ராஜலட்சுமி படுகொலை : ஜி.வி.பிரகாஷ் பேச்சு

MECSICO
Last Modified திங்கள், 29 அக்டோபர் 2018 (18:28 IST)
சேலம் மாவட்டம் ஆத்தூரில் சாமுவேல் சின்னப்பொன்னு தம்பதிக்கு ராஜலட்சுமி என்ற மகள் உள்ளார். ராஜலட்சுமி  அங்குள்ள அரசுப் பள்ளியில் எட்டாம் வகுப்பு படித்து வருகிறார்.
அங்குள்ள நெல் அறுவடை இயந்திரத்தின் ஓட்டுநராக பணிபுரியும் தினேஷ்குமார் என்பவர் ராஜலட்சுமியை பாலியல் ரீதியாக துன்புறுத்தியுள்ளார்.
 
இதனை ராஜலட்சுகின் தன் தாயிடம் வந்து கூறியிருக்கிறார்.
 
இதனை அறிந்து கொண்ட தினேஷ்குமார் ஆதிரத்துடன் சாமுவேல் வீட்டுக்குள் புகுந்து ராஜலட்சுமியின் தலையை துண்டித்து அரக்கத்தனமான முறையில்  கொலை செய்துள்ளார்.
 
இந்த கொலைசம்பவம் குறித்து கேள்விப்பட்ட ஆத்தூர் போலீஸார் வழக்கு பதிவு செய்து விசாரித்து வரும் அதேவேளையில் குற்றவாளியை தேடிவருகின்றனர்.
 
இதுகுறித்து ஜி.வி.பிரகாஷ் தன் டிவிட்டில்  பதிவிட்டிருப்பதாவது:
 
ராஜலட்சுமியின் மீதான பாலியல்,படுகொலை குறித்து அனைவரும் வெட்கித் தலை முனியவேண்டும் .இவ்வாறு அவர் பதிவிட்டிருக்கிறார்.


இதில் மேலும் படிக்கவும் :