1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: செவ்வாய், 4 பிப்ரவரி 2020 (16:01 IST)

சாலையோரம் தூங்குபவர்களைக் கொல்லும் சைக்கோ ! சேலத்தில் பீதி !

சைக்கோ கொலையாளி

சேலத்தில் நள்ளிரவில் சாலையோரம் படுத்துத் தூங்குபவர்களைக் கொன்றுவருகிறார் சைக்கோ கொலையாளி ஒருவர்.

சேலத்தில் அடுத்தடுத்து இருக் கொலைகள் நடந்து பொதுமக்களை பீதியடையச் செய்துள்ளது. இந்த இரு சம்பவங்களிலும் கொலை செய்யப்பட்டவர்கள் முதியவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது. அதேப்போல அவ்ர்களிடம் இருந்த பணமும் திருடப்பட்டுள்ளது.

இதனால் இந்த கொலைகளை சைக்கோ கொலையாளி செய்திருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது. இது சம்மந்தமான சிசிடிவி காட்சி ஒன்று வெளியாகியதை கொலையாளியைப் பிடிக்க சேலம் போலிசார் தனிப்படை அமைத்துள்ளனர்.