செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Prasanth Karthick
Last Modified: வெள்ளி, 29 மே 2020 (08:45 IST)

பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய கும்பல்: விசாரித்த போலீஸாருக்கு அதிர்ச்சி!

சேலத்தில் பெண்களை ஆபாச படம் எடுத்து மிரட்டிய கும்பலை போலீஸார் கைது செய்துள்ளனர்.

சமீபத்தில் இளம்பெண்களுக்கு ஆசை வார்த்தை காட்டி மோசடி செய்த காசி என்பவர் போலீஸாரால் கைது செய்யப்பட்டது தமிழகம் முழுவதும் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. இந்நிலையில் தற்போது சேலத்தில் இதுபோன்ற சம்பவம் ஒன்று நடந்துள்ளது.

சேலத்த்தில் உள்ள தாதகாப்பட்டியை சேர்ந்தவர் லோகநாதன். இவர் இவரது நண்பர்கள் உதவியுடன் சேலத்தில் உள்ள ஆதரவற்ற ஏழை பெண்கள், கணவனால் கைவிடப்பட்ட பெண்கள் ஆகியோரை குறிவைத்து பாலியில் தொழில் செய்ய அவர்களை வற்புறுத்தி வந்துள்ளனர். சாதகமான சூழல் ஏற்பட்டால் அவர்களை ஆபாசமாக புகைப்படமெடுத்து வைத்துக் கொண்டு பாலியல் தொழில் செய்ய அவர்களை மிரட்டியதாகவும் தெரிகிறது. அதுமட்டுமில்லாமல் பெண்களோடு உல்லாசமாக இருந்த சில தொழிலதிபர்களையும் ரகசியமாக வீடியோ எடுத்தும் மிரட்டியுள்ளனர்.

லோகநாதன் கும்பலால் பாதிக்கப்பட்ட சில பெண்கள் காவல் நிலையத்தில் அளித்த புகாரின் பேரில் லோகநாதன் மற்றும் அவரது நண்பர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர். லோகநாதனை விசாரத்ததில் மேலும் சில அதிர்ச்சிகரமான தகவல்கள் கிடைத்துள்ளன. இந்த குற்ற செயலில் ஈடுபட லோகநாதனுக்கு அவரது மனைவி, தந்தை என அவரது குடும்பமே உதவியுள்ளது. அவரது தந்தையையும் கைது செய்துள்ள நிலையில் தலைமறைவான லோகநாதனின் மனைவியை போலீஸார் தேடி வருகின்றனர். அவர்கள் பயன்படுத்திய செல்போன்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.