வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: புதன், 4 டிசம்பர் 2019 (09:49 IST)

ஜெயின் ஜார்ஜ் கோட்டை வள்ளுவன் கோட்டையாக மாற்றப்படும்: பிரபல அரசியல்வாதி

ஆன்மீக அரசியல் ஆட்சியை பிடித்தவுடன் செயின்ட் ஜார்ஜ் கோட்டை வள்ளுவன் கோட்டையாக பெயர் மாற்றப்படும் என இந்து மக்கள் கட்சியின் தலைவர் அர்ஜூன் சம்பத் கூறியுள்ளார் நேற்று சென்னையில் ஆன்மீக அரசியல் மாநாடு நடைபெற்றது. இந்த மாநாட்டுக்கு அர்ஜுன் சம்பத் தலைமை தாங்க, மாநாட்டை நடிகர் எஸ்வி சேகர் துவக்கி வைத்தார். இந்த மாநாட்டில் அர்ஜூன் சம்பத் பேசியதாவது
 
தமிழகத்தில் திராவிட அரசியலுக்கு மாற்றாக, தேசிய அரசியலை, ஆன்மிகம் சார்ந்த வளர்ச்சி அரசியலை கொண்டு வருவதற்காக இந்த மாநாடு நடத்தப்படுகிறது. தமிழகத்தில் பல்வேறு வளர்ச்சி திட்டங்களை மத்திய அரசு கொண்டு வருகிறது. ஆனால் அவற்றை வரவிடாமல் தடுக்கின்றனர்.
 
தமிழகத்தையும், தமிழர்களையும் வஞ்சிக்கும் அரசியலுக்கு மாற்றாக, வளர்ச்சி அரசியலை, ஆன்மிக அரசியலை முன்னிறுத்துவதே எங்கள் நோக்கம். அதேபோல் செயின்ட் ஜார்ஜ் கோட்டையை, வள்ளுவன் கோட்டையாக மாற்றுவதற்காகவே இந்த மாநாடு நடத்தப்படுகிறது. இந்தியாவில் தமிழகம் தான் ‘டாஸ்மாக்’ மாநிலமாக உள்ளது.தமிழகத்தில் எந்த ஒரு நலத்திட்டத்தையும் நிறைவேற்ற முடியாத சூழ்நிலை உள்ளது. நதிநீர் இணைப்பு நீர் மேலாண்மை எட்டு வழிச்சாலை தொழில் வளர்ச்சி என அனைத்தையும் அரசியல் காரணங்களுக்காக எதிர்க்கட்சியினர் எதிர்க்கின்றனர்.
 
ஆன்மிகத்தின் மீது நம்பிக்கை கொண்ட நடிகர் ரஜினிகாந்துக்கு மக்கள் ஆதரவு பெருகி வருகிறது. அவர் அரசியலுக்கு வருவதை எதிர்க்கின்றனர். அவர் அரசியலுக்கு வருவதில் தவறில்லை. தமிழகத்தில் 2021-ம் ஆண்டு சட்டசபை தேர்தலில் ஆன்மிக அரசியல் எழுச்சி பெறுவதன் மூலம் அற்புதமும், அதிசயமும் நடக்கும்.
 
இவ்வாறு அர்ஜூன் சம்பத் பேசினார்