ஞாயிறு, 28 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 3 டிசம்பர் 2020 (19:11 IST)

ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து சைதை துரைசாமியின் நீண்ட அறிக்கை!

ரஜினிகாந்த் அரசியல் வருகை குறித்து சைதை துரைசாமியின் நீண்ட அறிக்கை!
சூப்பர் ஸ்டார் ரஜினியின் அரசியல் வருகை அனைத்து அரசியல்வாதிகளுக்கும் கலக்கத்தை ஏற்படுத்தியிருந்தாலும், வெளிப்படையாக காட்டி கொள்ளாமல் அவரது அரசியல் வருகையை ஆதரிப்பதாக தெரிவித்தனர்.
 
இந்த நிலையில் முன்னாள் சென்னை மேயர் சைதை துரைசாமி அவர்கள் உண்மையாகவே மகிழ்ச்சி அடைந்து ரஜினியின் அரசியல் வருகை குறித்து ஒரு அறிக்கையை வெளியிட்டுள்ளார். அந்த அறிக்கையில் அவர் கூறியிருப்பதாவது:
 
சூப்பர்‌ ஸ்டார்‌ ரஜினிகாந்த்‌ அவர்கள்‌ ஜனவரியில்‌ கட்‌சி துவக்கம்‌, வருகின்ற டிசம்பர்‌ 31-ம்‌ தேதி அறிவிப்பு என்று சொல்லி இருக்கிறார்‌. இது சாதாரண அறிவிப்பு அல்ல. தமிழக அரசியலில்‌ மாற்றத்தை ஏற்படுத்தக்கூடிய திருப்பம்‌ இது. 1972-ல்‌ புரட்சி தலைவர்‌ எம்ஜிஆர்‌ கொண்டுவந்த மாற்றத்தை போல அமையக்கூடிய திருப்பத்தை, சூப்பர்‌ ஸ்டார்‌ ரஜினி அறிவித்துள்ளார்‌.
 
கடந்த 2018ம்‌ வருடம்‌ மார்ச்‌ 5-ம்தேதி சென்னை வேலப்பன்‌ சாவடியில்‌ புரட்‌சித்தலைவர்‌ பொன்மனச்செம்மல்‌ இதய தெய்வம்‌ எம்ஜிஆர்‌ அவர்களின்‌ திருவுருவச்சிலை திறப்பு விழாவிலே அவர்‌ “ என்னால்‌ புரட்சி‌ தலைவர்‌ எம்ஜிஆர்‌ போல நல்லாட்சியை, ஏழைகளுக்கான ஆட்சியை, சாமானியருக்கான ஆட்சியை, நடுத்தர வர்க்க குடும்பங்களுக்கான ஆட்சியை தரமுடியும்‌” என்பதை ஆழ்ந்த நம்பிக்கையுடன்‌ உறுதிபடச்‌ சொல்லி இருந்தார்‌.
 
நல்ல திறமையான ஆலோசகர்களையும்‌ தொழில்நுட்பங்களையும்‌ பயன்படுத்தி அத்தகைய ஒரு ஆட்சியை கொடுப்பேன்‌ என்பதையும்‌ சொல்லி இருந்தார்‌. ஏழைகளுக்கான சாமானிய மக்களுக்கான புரட்‌சி த்தலைவரின்‌ ஆட்சியை மீண்டும்‌ தமிழகத்தில்‌ மலரச்செய்ய சூப்பர்‌ ஸ்டார்‌ ரஜினிகாந்த்‌ அவர்கள்‌ முன்வந்திருப்பதை நான்‌ வரவேற்கிறேன்‌.
 
அவருக்கு எம்ஜிஆருக்கு துணை நின்று, ஆதரவளித்து, திமுகவை வீழ்திய அனைவரும்‌ ஆதரவு தருவார்கள்‌ என்பது எண்ணம்‌ கொரோனா நோய்‌ தொற்றுக்‌ காலத்தில்‌ தன்‌ உயிரையும்‌ பொருட்படுத்தாமல்‌ தமிழக மக்களின்‌ நலனை மட்டுமே மனதில்‌ கொண்டு அவர்‌ முழுநேர அரசியலில்‌ ஈடுபடுவது என்று முடிவு எடுத்திருப்பது மிகவும்‌ வரவேற்கத்தக்கது, பாராட்டத்தக்கது. தமிழ்நாட்டின்‌ தலை எழுத்தை மாற்றவேண்டிய நாள்‌ வந்தாச்சு. நிச்சயம்‌ அது நடக்கும்‌” என்ற ரஜினியின்‌ நம்பிக்கையான வார்த்தையை வரவேற்று அவருக்கு என்‌ மனமார்ந்த வாழ்த்துகள்‌.
 
இவ்வாறு முன்னாள் சென்னை மாநகராட்சி மேயர் சைதை துரைசாமி தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளார்.