1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By ashok
Last Updated : வெள்ளி, 18 செப்டம்பர் 2015 (14:20 IST)

நரபலி விவகாரம்: மீண்டும் தோண்டும் பணி தொடக்கம்

மேலூரை அடுத்து சின்னமலைப்பட்டு சுடுக்காட்டில் எலும்பு கூடுகள் கண்டுப்பிடிக்கப்பட்டதை அடுத்து அங்கு மேலும் 10 தோண்ட முடிவு செய்யப்பட்டுள்ள நிலையில் சகாயம் குழ முன்னிலையில் போலீஸ் பாதுகாப்புடன் தோண்டும் பணி  தொடங்கியது.
 
சின்னமலம்பட்டி பகுதியில் பிஆர்பி நிறுவனம் மனநலம் பாதிக்கப்பட்டவர்களை நரபலி கொடுக்கப்பட்டதாக கூறப்பட்ட இடத்தில், கடந்த ஞாயிற்றுக்கிழமை, சட்ட ஆணையர் சகாயம்  முன்பு, குறிப்பிட்ட இடத்தில் 5 அடி ஆழத்திற்கு தோண்டப்பட்டது.அப்பேது நான்கு பேருடைய எலும்புத் துண்டுகள் கைப்பற்றப்பட்டு ஆய்விற்காக சென்னைக்கு அனுப்பியுள்ளனர். பின்னர் நேரம் முடிந்து விட்டதால் தோண்டும் பணி 5 அடியோடு நிறுத்தப்பட்டது.

இந்நிலையில் அதே இடத்தில் மீண்டும் 10 அடி தோண்ட  ஐஏஎஸ் அதிகாரி  சகாயம் குழு கேட்டுக்கொண்டதின் பேரில்  மாவட்ட கண்காணிப்பாளர் முன்னிலையிலும் தோண்டும் பணி தொடங்கியது. மாவட்ட நிர்வாகத்தின் உத்தரவின் பேரில் ஆர்டிஓ செந்தில் குமாரி அவர்களின் தலமையில் வருவாய் துறை அதிகாரிகள் அங்கு வந்துள்ளனர்.

மேலும், காவல் துறை அதிகாரிகளும், மருத்து குழுவும் மயானத்திற்கு வந்துள்ளனர். தற்போது தோண்டும் பணியை சகாயம் குழுவினர் கண்காணித்து வருகின்றனர்.