புதன், 25 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : ஞாயிறு, 17 அக்டோபர் 2021 (08:46 IST)

முதல்வர் முக ஸ்டாலின் ஆட்சி குறித்து விஜய் தந்தை எஸ்.ஏ.சி கருத்து!

தமிழக முதல்வராக முக ஸ்டாலின் அவர்கள் கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் பதவியேற்ற நிலையில் அவரது ஆட்சி குறித்து பெரும்பாலான பாசிட்டிவ் விமர்சனங்கள் எழுந்து வருகின்றன என்பதும் அரசியல் கட்சித் தலைவர்கள் திரையுலகினர் மற்றும் தொழிலதிபர்கள் அவரது ஆட்சியை பாராட்டி வருகின்றனர் என்பதும் குறிப்பிடத்தக்கது
 
இந்த நிலையில் தளபதி விஜய்யின் தந்தையும் இயக்குனருமான சந்திரசேகர் அவர்கள் முதல்வர் முக ஸ்டாலின் ஆட்சிக்கு தனது வாழ்த்துக்களை தெரிவித்துள்ளார் அவர் கூறியிருப்பதாவது:
 
கலைஞர் கருணாநிதி இருந்திருந்தால் ஸ்டாலின் செயல்களைப் பார்த்து ஆச்சரியப்பட்டு இருப்பார் என்றும் அம்மா உணவகத்தில் பெயரை மாற்ற வேண்டாம் என சொன்னார் இந்த மாதிரி பெருமை எல்லாம் நான் இதுவரை அரசியலில் பார்த்ததில்லை என்றும் புகழாரம் சூட்டியுள்ளார்.