‘சமையல் மந்திரம்’ நிகழ்ச்சியில் ஆபாசம் - எஸ்.வி.சேகர் காட்டம்


Murugan| Last Modified வியாழன், 22 டிசம்பர் 2016 (16:56 IST)
கேப்டன் தொலைக்காட்சியில் ஒளிபரப்பப்படும் சமையல் மந்திரம் நிகழ்ச்சி குறித்து நடிகரும், பாஜக பிரமுகரான எஸ்.வி.சேகர் கருத்து தெரிவித்துள்ளார்.

 


 
சமையல் மந்திரம் நிகழ்ச்சியில் பாலியல் தொடர்பான பிரச்சனைகளுக்கு தீர்வு சொல்லப்படுகிறது. இரவு 10 மணிக்கு மேல் ஒளிபரப்பப்படும் இந்த நிகழ்ச்சியை ஏராளமானோர் பார்த்து ரசிக்கின்றனர்.
 
அந்த நிகழ்ச்சியில் ஒரு மருத்துவரும், ஒரு பெண்ணும் இடம் பெறுகிறார்கள். சில சமயங்களில்  அவர்கள் ஆபசமாக ஆடை அணிந்து வருவதோடு, ஆபாசமாகவும் பேசுகின்றனர். இதனால், இந்த நிகழ்ச்சி பெண்களை முகம் சுளிக்க வைத்துள்ளது.
 
அப்படி ஆபாச உடை அணிந்த நிகழ்ச்சி தொகுப்பாளரின் புகைப்படத்தை தனது டிவிட்டர் பக்கத்தில் பதிவு செய்துள்ள எஸ்.வி.சேகர் “ஆபாச படங்கள் தொலைக்காட்சிகளில் ஒளிபரப்ப தடைவிதிக்கப்பட்டிருக்கிறது. ஆனால், ஆபாச நிகழ்ச்சிகள் நேரிடையாக ஒளிபரப்பப்படுகின்றன. இது முட்டாள்தனத்தின் உச்சக்கட்டம்” என குறிப்பிட்டுள்ளார். 

webdunia

இதில் மேலும் படிக்கவும் :