செவ்வாய், 5 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: சனி, 13 ஜூலை 2019 (14:16 IST)

ஒரு வருடம் நடந்த எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழா – எவ்வளவு செலவு தெரியுமா ?

எம்.ஜி.ஆர் நூற்றாண்டு விழாவுக்காக செலவிடப்பட்ட தொகை எவ்வளவு என்பது குறித்து தமிழக அரசு சார்பில் வெளியிடப்பட்டுள்ளது.

மறைந்த முன்னாள் முதலமைச்சர் எம்.ஜி.ஆரின் 100 ஆவது பிறந்தநாளை முன்னிட்டு தமிழகம் முழுவதும் 2017-2018 ஆண்டுகளில் பிறந்தநாள் விழாக் கொண்டாடப்பட்டது. மதுரையில் தொடங்கிய இந்த விழாவானது திருப்பூர், திருவண்ணாமலை, விழுப்புரம், திருவாரூர், திருச்சி, தேனி என்று வரிசையாக அனைத்து மாவட்டங்களிலும் நடைபெற்று சென்னையில் நிறைவடைந்தது.

மதுரையைச் சேர்ந்த ஹக்கீம் என்பவர் நீதிமன்றத்தில் தகவல் அறியும் உரிமைச் சட்டத்தின் கீழ்,  இந்த விழாக்களுக்கு எவ்வளவு செலவானது என்ற விவரத்தைப் பெற்றுள்ளார். இந்நிலையில் இப்போது தமிழக அரசு அந்த விவரங்களை வெளியிட்டுள்ளது. அதில் ஒட்டுமொத்தமாக இந்த விழாவுக்கு 6.88 கோடி ரூபாய் செலவானதாக அறிவிக்கப்பட்டது.

இந்த விவரங்கள் மாவட்டவாரியாக வெளியிடப்பட்டுள்ளன. சென்னையில் மிக அதிகமாக ரூ.1.99 கோடி செலவிடப்பட்டுள்ளது. நீலகிரியில் குறைந்தபட்சமாக ரூ.13.82 லட்சம் செலவாகியுள்ளது.