ஞாயிறு, 22 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : செவ்வாய், 27 ஆகஸ்ட் 2024 (09:04 IST)

2 அமாவாசைக்குதான் தாங்கும்: விஜய் கட்சியை மறைமுகமாக கூறினாரா ஆர்.எஸ். பாரதி?

RS Bharathi
இனிமேல் யார் கட்சி ஆரம்பித்தாலும் இரண்டு அமாவாசைக்கு மட்டுமே தாங்கும் என்றும் அதற்கு மேல் தாங்காது என்றும் கட்சி ஆரம்பிப்பவர்கள் எல்லாம் எம்ஜிஆர் ஆகிவிட முடியாது என்றும் திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

புலியை பார்த்து பூனை சூடு போட்டதை போல கட்சி ஆரம்பிப்பவர்கள் நாளைக்கே கோட்டைக்கு வந்து விடலாம் என்று நினைக்கிறார்கள் என்றும் அது நடக்காது என்றும் ஆர்எஸ் பாரதி தெரிவித்துள்ளார்.

கடந்த சில மாதங்களுக்கு முன்னர் தமிழக வெற்றி கழகம் என்ற கட்சியை விஜய் ஆரம்பித்த நிலையில் அவருடைய கட்சிக்கொடியும் சமீபத்தில் அறிமுகம் செய்யப்பட்டது. மேலும் முதல் மாநாடு விரைவில் நடத்த இருப்பதாக கூறப்படும் நிலையில் விஜய் அரசியல் குறித்து பல்வேறு அரசியல் கட்சி தலைவர்கள் குறிப்பாக திமுகவை சேர்ந்தவர்கள் கடும் விமர்சனம் செய்து வருகின்றனர்.

இந்த நிலையில் சமீபத்தில் பேட்டி அளித்த திமுக அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி யார் இனிமேல் புதிதாக கட்சி ஆரம்பித்தாலும் இரண்டு அமாவாசைகளுக்கு மட்டுமே தாங்கும் என்று கூறியுள்ளது விஜய் கட்சியை தான் அவர் மறைமுகமாக கூறுவதாக கூறப்பட்டுள்ளது.

Edited by Siva