வியாழன், 28 மார்ச் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : சனி, 21 ஜூலை 2018 (19:36 IST)

லாரி ஸ்டிரைக் நீடிப்பதால் தமிழகத்தில் ரூ.600 கோடி இழப்பு

தமிழகத்தில் 2வது நாளாக லாரிகள் ஸ்டிரைக் நீடிப்பதால் ரூ.600 கோடி இழப்பு ஏற்பட்டுள்ளது.

 
டீசல் விலை உயர்வு, சுங்க கட்டணம் உயர்வு உள்ளிடைவையை கண்டித்து அகில இந்திய மோட்டார் காங்கிரஸ் சார்பில் நேற்று நாடு முழுவதும் லாரி நேற்று ஸ்டிரைக் தொடங்கியது.
 
இன்று இரண்டாவது நாளாக ஸ்டிரைக் நீடிக்கிறது. இந்தியா முழுவதும் 68 லட்சம் லாரிகள் ஓடவில்லை. தமிழகத்தில் சுமார் 4 லட்சத்துக்கு மேல் லாரிகள் ஆங்காங்கே நிறுத்தி வைக்கப்பட்டுள்ளன. இதனால் நாடு முழுவதும் ரூ.10 ஆயிரம் கோடிக்கு மேல் சரக்குகள் தங்கியுள்ளது. 
 
தமிழகத்தில் ரூ.300 கோடி மதிப்புள்ள சரக்குகள் தேங்கி கிடக்கிறது. முட்டை விநியோகம் பாதிக்கப்பட்டுள்ளதால் முட்டையின் விலை உயர தொடங்கி உள்ளது. 
 
மேலும், இன்னும் ஓரிரு நாட்கள் ஸ்டிரைக் தொடர்ந்தால் கோயம்பேடு மார்க்கெட்டில் காய்கறி விலைகள் கடுமையாக உயரும் அபாயம் ஏற்பட்டுள்ளது. இன்று இரண்டாவது நாளாக ஸ்டிரைக் நீடிப்பதால் ரூ.600 கோடிக்கு இழப்பு ஏற்பட்டுள்ளது.