வெள்ளி, 27 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: திங்கள், 10 ஜனவரி 2022 (12:25 IST)

சென்னையில் முகக்கவசம் அணியாத 3,174 பேர் - ரூ.6.34 லட்சம் வசூல்!

சென்னையில் முகக்கவசம் அணியாத 3,174 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், ரூ.6.34 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. 

 
கடந்த சில மாதங்களில் தமிழகத்தில் கொரோனா கட்டுக்குள் வந்திருந்த நிலையில் பாதிப்புகளும் குறைந்தன. இந்நிலையில் தற்போது டெல்டா, ஒமிக்ரான் இருவகை வேரியண்டுகளும் வேகமாக பரவி வருவதால் மீண்டும் பாதிப்புகள் அதிகரித்துள்ளது. கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு மீண்டும் பல கட்டுப்பாடுகளை வெளியிட்டுள்ளது.
 
மேலும் மக்கள் பொது இடங்களில் மாஸ்க் அணிவதை தமிழக அரசு தீவிரமாக வலியுறுத்தி வருகிறது. ஆனாலும் பலர் மாஸ்க் அணிவதை தவிர்த்து அலட்சியம் காட்டுவதும் தொடர்கிறது. இந்நிலையில் மாஸ்க் அணியாவிட்டால் அபராதம் என்ற நடைமுறை தற்போது தமிழகத்தில் உள்ளது. 
 
அந்த வகையில் சென்னையில் முகக்கவசம் அணியாத 3,174 பேர் மீது வழக்குப்பதிவு செய்யப்பட்ட நிலையில், ரூ.6.34 லட்சம் அபராதம் வசூலிக்கப்பட்டுள்ளது. கொரோனா விதிமுறைகளை மீறியதாக 1,040 வழக்குகள் பதிவு செய்யப்பட்ட நிலையில் 1,205 வாகனங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.