1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 14 அக்டோபர் 2021 (17:57 IST)

50 ரூபாய்க்கு பட்டுப்புடவை: சலுகை அறிவித்த கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!

50 ரூபாய்க்கு பட்டுப்புடவை: சலுகை அறிவித்த கடைக்கு ரூ.10 ஆயிரம் அபராதம்!
50 ரூபாய்க்கு பட்டுப்புடவை என சலுகை அறிவித்த ஜவுளி கடைக்கு பத்தாயிரம் ரூபாய் அபராதம் வைத்துள்ள தகவல் தற்போது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது 
 
தென்காசி மாவட்டம் ஆலங்குளம் என்ற பகுதியில் புதிய ஜவுளிக் கடை ஒன்று சமீபத்தில் திறக்கப்பட்டது. இந்த ஜவுளி கடை திறப்பு விழாவிற்காக 50 ரூபாய்க்கு பட்டுப் புடவை விற்பனை என்ற அறிவிப்பு வெளியானது
 
இந்த அறிவிப்பு காரணமாக அந்த கடையின் முன்னே அதிகாலை முதலே பெண்கள் ஏராளமானோர் குவிந்தனர். இந்த நிலையில் ஊரடங்கு விதிகளை மீறி அதிக கூட்டம் கூடியதாக அந்த கடையின் நிர்வாகத்திற்கும் மாவட்ட நிர்வாகம் ரூபாய் 10,000 அபராதம் விதித்து உள்ளது இதனால் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது