1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Modified: செவ்வாய், 3 ஆகஸ்ட் 2021 (18:12 IST)

3 ஆம் பாலினத்தவருக்கு ரூ.4000 - தமிழக அரசு

தமிழகத்தில் 3 ஆம் பலினத்தவர்களுக்கு மூன்று மாதக் காலத்திற்குள் ரூ. 4000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது.

தமிழகத்தில் முக.ஸ்டாலின் தலைமையிலான திமுக ஆட்சி நடைபெற்று வருகிறது. கடந்த மே மாதம் ஸ்டாலின் முதல்வராகப் பதவியேற்றது முதல் பல்வேறு திட்டங்களை அறிவித்து வருகிறார்.

அதேபோல், திமுக தேர்தல் அறிக்கையில் அறிவித்த அறிவிப்புகளை நிறைவேற்றி வருகிறார். குடும்ப அட்டைகளுக்கு மளிகைப் பொருட்கள், குடும்ப அட்டைகளுக்கு ரூ.4000 என இரண்டு தவணைகளாக வழங்கப்பட்டது.

இந்நிலையில்,ரேசன் அட்டைகளோ, அடையாள அட்டைகளோ இல்லாத 3 ஆம் பலினத்தவர்களுக்கு மூன்று மாதக் காலத்திற்குள் ரூ. 4000 வழங்கப்படும் என தமிழக அரசு அறிவித்துள்ளது. இது பெரும் வரவேற்பைப் பெற்றுள்ளது.