ஞாயிறு, 29 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : செவ்வாய், 15 ஜூன் 2021 (07:14 IST)

ரேசன் கடைகளில் இன்று முதல் ரூ.2000 இரண்டாவது தவணை: அரசு அறிவிப்பு

தமிழகத்தில் உள்ள ரேஷன் கடைகளில் இன்று முதல் இரண்டாவது தவணை ரூபாய் 2000 வழங்கப்பட உள்ளது. இதற்கான டோக்கன் வழங்கும் பணிகள் கடந்த 11ம் தேதி முதல் 14ம் தேதி வரை நடைபெற்ற நிலையில் இன்று முதல் ரூபாய் 2000 விநியோகம் செய்யப்படுவதாக தமிழக அரசு அறிவித்துள்ளது 
 
ரூபாய் 2000 மற்றும் 14 வகை மளிகை பொருட்கள் இன்று முதல் அனைத்து அரிசி ரேஷன் அட்டைதாரர்களுக்கு வழங்கப்படும் என்றும் டோக்கன்களில் பதிவு செய்யப்பட்டுள்ள தேதி மற்றும் நேரத்தின் படி அரிசி அட்டைதாரர்கள் ரேஷன் கடைகளில் இந்த பொருட்களை பெற்றுக் கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது 
 
மேலும் இம்மாத இறுதிவரை ரூபாய் 2000 மற்றும் மளிகை பொருட்கள் வழங்கப்படும் என்பதால் பொதுமக்கள் தங்களுக்கு கிடைக்குமோ கிடைக்காதோ என்ற பயம் இன்றி அனைவரும் பெற்றுக்கொள்ளலாம் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது
 
மேலும் ரேஷன் கடைகளில் வாங்கிய மளிகை பொருட்களை வெளிச்சந்தையில் விற்பனை செய்தால் கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தமிழக அரசு எச்சரிக்கை விடுத்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது