வியாழன், 26 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 28 அக்டோபர் 2021 (15:10 IST)

கூட்டுறவு வங்கிகளில் போலி நகைகள்: ரூ.15 கோடி மோசடி என தகவல்!

கூட்டுறவு வங்கிகளில் கோடிக்கணக்கில் போலி நகைகளை வைத்து கடன் பெற்றுள்ளதாக கூட்டுறவு துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் தெரிவித்துள்ளது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது
 
தமிழ்நாடு கூட்டுறவு வங்கிகளில் போலி நகைகளை வைத்து ரூபாய் 15 கோடி வரை மோசடி நடந்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டுள்ளதாகவும் இது குறித்து விசாரணை நடத்தப்படும் என்றும் கூட்டுறவுத்துறை அமைச்சர் ஐ பெரியசாமி அவர்கள் தெரிவித்துள்ளார். 
 
தூத்துக்குடியில் நகையே இல்லாமல் வெறும் பையை மட்டும் வைத்து பணம் கொடுக்கப்பட்டு உள்ளதாகவும் அவர் கூறியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது
 
இந்த நிலையில் கடந்த அதிமுக ஆட்சிக்காலத்தில் போலி நகைகளை வைத்து கோடிக்கணக்கில் கடன் பெற்று மோசடி செய்தவர்கள் பட்டியல் எடுக்கப்பட்டு வருவதாகவும் இது குறித்து தகுந்த நடவடிக்கை எடுக்கப்பட்டு குற்றம் செய்தவர்கள் நீதியின் முன் நிறுத்தப்படுவார்கள் என்றும் கூறப்பட்டு வருவது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது