1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sivalingam
Last Modified: புதன், 16 ஆகஸ்ட் 2017 (22:58 IST)

அப்ப அந்த ரூ.10 கோடி வாடகை உண்மைதானா?

லதா ரஜினிகாந்த் நடத்தி வரும் பள்ளிக்கு ரூ.10 கோடி வாடகை பாக்கி இருப்பதால் வீட்டு உரிமையாளர் பூட்டு போட்ட விவகாரம் இன்று மாலை முதல் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த நிலையில் இதெல்லாம் வதந்தி, கூடிய விரைவில் இதுகுறித்து விளக்கம் அளிப்போம் என்று பள்ளி நிர்வாகம் தெரிவித்திருந்தது.



 
 
இந்த நிலையில் சற்றுமுன் வெளிவந்த தகவலின்படி ரூ.10 கோடி வாடகை பாக்கிக்காக பள்ளியை மூடிய உரிமையாளர் மீது மானநஷ்ட வழக்கு தொடரவுள்ளதாக லதாரஜினியின் வழக்கறிஞர் தெரிவித்துள்ளதாக செய்திகள் கூறுகின்றன. இந்த செய்தி உண்மையாக இருக்கும் பட்சத்தில் ரூ.10 கோடி வாடகை பாக்கி உள்ளது என்ற தகவலையும் பள்ளி நிர்வாகத்தினர்களே ஒப்புக்கொள்வதாக அர்த்தம் ஆகிறது.
 
ஒரு படத்திற்கு ரூ.50 கோடி வரை சம்பளம் வாங்கும் ரஜினியால் 8 வருடங்களாக கட்டிடத்திற்கு வாடகை கொடுக்க முடியவில்லை என்றால் யாராவது நம்புவார்களா? என்றும், முதல்வராக ஆக நினைக்கும் ஒருவரின் மீது இதுபோன்ற சில்லறைத்தனமான குற்றச்சாட்டு எழுந்தால் மக்கள் அவரை நம்பி எப்படி ஓட்டு போடுவார்க்ள் என்றும் டுவிட்டரில் கருத்துக்கள் பதிவு செய்யப்பட்டு வருகின்றது.