திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Papiksha Joseph
Last Updated : திங்கள், 5 ஏப்ரல் 2021 (15:15 IST)

மதுபாட்டில்களுடன் கைப்பற்றப்பட்ட ரூ.1.06 லட்சம் - அதிமுக மாதேஸ்வரன் கைது!

கன்னங்குறிச்சி பேரூராட்சி அதிமுக அவைத்தலைவர் மாதேஸ்வரன் கைது!
 
தமிழக சட்டமன்ற தேர்தல் நாளை நடைபெற உள்ள நிலையில் தமிழகம் முழுவதும் பாதுகாப்பு ஏற்படுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. வேட்பாளர்கள் வாக்காளர்களுக்கு பணப் பட்டுவாடா செய்து வருகின்றனர். இதனால் கண்காணிப்பில் போலீசார் முழு வீச்சில் இறங்கியுள்ள நிலையில் சேலம் கன்னங்குறிச்சி பேரூராட்சி அதிமுக அவைத்தலைவர் மாதேஸ்வரன் வாக்காளர்களுக்கு அளிக்க 100 மதுபாட்டில்கள் மற்றும் ரூ.1.06 லட்சம் பணம் வைத்திருந்ததாக வந்த புகாரையடுத்து அவர் அதிரடியாக கைது செய்யப்பட்டுள்ளார்.