1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : புதன், 31 மார்ச் 2021 (00:10 IST)

ரவுடிகளை கட்சியில் சேர்ந்துள்ளது பாஜக – ஸ்டாலின்

தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர்.

இந்நிலையில் சமீபத்தில் திமுக, அதிமுக, காங்கிரஸ், அமமுக, ம.நீ,.ம , பாஜக போன்ற கட்சிகள் தங்கள் தேர்தல் அறிக்கையை வெளியிட்ட தேர்தல் அறிக்கையை வெளியிட்டன,.
இன்னும் சில நாட்களே இருப்பதால் அனைத்துக் கட்சிகள் தீவிரமாக போஸ்டர்களும் விளம்பரங்களும் பிரசாரமும்  செய்து வருகின்றனர்.

இந்நிலையில், ஒவ்வொரு கட்சியும் தங்கள் எதிர்க்கட்சிக்கு எதிராக குற்றச்சாட்டுகளைக் கூறி தங்கள் கட்சிக்கு ஆதரவாக மக்களிடம் வாக்குகள் சேகரித்து வருகின்றனர்.

தென்காசி மாவட்டத்தில் உள்ள ஆலங்குளம் தொகுதியில் திமுக வேட்பாளரை ஆதரித்து திமுக தலைவர் ஸ்டாலின் பரப்புரை மேற்கொண்டார். அப்போது பேசிய அவர், பிரதமர் மோடி, ஓபிஎஸ், இபிஎஸ் ஆகிய இருவரையும் அருகில் வைத்துக்கொண்டு ஊழல் குறித்துப் பேசி வருகிறார். பாஜக ரவுடிகளை இணைத்து வருகின்றனர் எனத் தெரிவித்துள்ளார்.