1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Updated : வியாழன், 22 பிப்ரவரி 2018 (15:17 IST)

கமல்ஹாசனுக்கு கண்டனம் தெரிவித்த ரோஜா

ஊழல் புகாரில் சிக்கிய சந்திரபாபு நாயுடுவை புகழ்ந்து பேசிய கமல்ஹாசனுக்கு நடிகையும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ரோஜா கண்டனம் தெரிவித்துள்ளார்.
 
நடிகர் கமல்ஹாசன் தனது அரசியல் பிரவேசத்தை நேற்று ராமேஸ்வரத்தில் உள்ள மறைந்த முன்னாள் ஜனாதிபதி அப்துல் கலாம் இல்லத்திலிருந்து துவங்கினார். அதன்பின் மாலை நடைபெற்ற மதுரை பொதுக்கூட்டத்தில் ‘மக்கள் நீதி மய்யம்’ என்ற கட்சியை பெயரை அறிவித்தார்.
 
பொதுக்கூட்டத்தில் சந்திரபாபு நாயு பற்றி கமல், ஆந்திர முதல்வர் சந்திர பாபுநாயுடுவிடம் கொள்கைகள் குறித்து ஆலோசனை கேட்டேன். அவர் கூறிய கருத்துக்கள் நான் நினைத்தது போல் இருந்தது என்று அவரை பாராட்டி பேசினார்.
 
இது குறித்து நடிகையும் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் எம்.எல்.ஏ.வுமான ரோஜா கூறியதாவது:-

ஊழலை எதிர்க்கும் கமல் ஏன் ஊழல் புகாரில் சிக்கிய சந்திரபாபு நாயுடுவிடம் ஆலோசனை கேட்டார். பாஜகவை கமல் எதிர்த்து வருகிறார், ஆனால் அதே பாஜகவுடன் கூட்டணி அமைத்து ஆட்சி செய்து வரும் சந்திரபாபு நாயுடுவை பாராட்டி உள்ளார்.
 
கமல் சந்திரபாபு நாயுடுவை பற்றி தெரிந்து பேசுகிறாரா? அல்லது தெரியாமல் பேசுகிறாரா? என்பதை கமல் தெளிவுப்படுத்த வேண்டும் என்று ரோஜா கூறியுள்ளார்.