'லியோ' டிரைலர் திரையிடலுக்குப் பிறகு அதிர்ந்த 'ரோகிணி 'தியேட்டர்
தமிழ் சினிமாவின் பிரபல இயக்குனர் லோகேஷ் கனகராஜ். இவர் மாநகரம், கைதி, மாஸ்டர், விக்ரம், ஆகிய படங்களை அடுத்து இயக்கியுள்ள படம் லியோ.
இப்படத்தில் விஜய் ஹீரோவாக நடித்துள்ளார். அனிருத்தின் இசையில், அன்பறிவின் ஸ்டண்டில் விஜய்யின் அதிரடி ஆக்சனில், சஞ்சய் தத், அர்ஜூனின் அசத்தல் நடிப்பில் நடிப்பில் உருவாகியுள்ள இப்படத்தை தியேட்டரில் காண்பதற்கு முன்னோட்டமாக அமைந்துள்ள டிரைலர் தமிழ், இந்தி, தெலுங்கு கன்னட ஆகிய மொழிகளிலும் வெளியாகியுள்ளது.
இந்த டிரைலர் சென்னை ரோகினி தியேட்டரில் சிறப்பு காட்சியாக இன்று திரையிடப்பட உள்ளதாக தகவல் வெளியானது.
இதையடுத்து, விஜய் ரசிகர்கள் அங்கு குவிந்தனர். இந்த நிலையில், லியோ டிரைலர் 6:30 மணிக்கு ரிலீசான நிலையில் லியோ டிரைலர் சிறப்பு காட்சியின்போதுரோகிணி திரையரங்கில் இருக்கைகளை விஜய் ரசிகர்கள்சேதப்படுத்தினர்.
இதுகுறித்த வீடியோக்கள் மற்றும் புகைப்படங்கள் வைரலாகி வருகிறது.