1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Mahendran
Last Modified: திங்கள், 27 மே 2024 (14:18 IST)

நான் பொறுப்பேற்ற போது தமிழக பல்கலைக்கழகங்கள் மோசமாக இருந்தது: ஆளுநர் ரவி

governor ravi
நான் தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்ற போது தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் நிலைமை மோசமாக இருந்தது என்று ஆளுநர் ரவி கூறி இருப்பது பரபரப்பு ஏற்படுத்தி உள்ளது.
 
இன்று ஊட்டியில் நடைபெற்ற துணைவேந்தர்கள் மாநாட்டில் தமிழக ஆளுநர் ரவி கலந்து கொண்டு பேசினார். அப்போது ’2021 ஆம் ஆண்டு நான் தமிழகத்தின் ஆளுநராக பொறுப்பேற்ற போது தமிழகத்தில் உள்ள பல்கலைக்கழகங்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்தது என்று தெரிவித்தார். 
 
ஒவ்வொரு பல்கலைக்கழகமும் மற்ற பல்கலைக்கழகங்களுடன் தொடர்பின்றி தனித்தனியாக செயல்பட்டு வந்தன என்றும் அவைகளின் தரமும் குறைந்து காணப்பட்டது என்றும் இது எனக்கு மிகவும் ஏமாற்றத்தை அளித்தது என்று கூறினார்.இதை மாற்றாவே துணைவேந்தர்கள் மாநாடு கடந்த மூன்று ஆண்டுகளாக நடத்தப்பட்டு வருகிறது என்றும் அவர் கூறியுள்ளார்.
 
 ஒரு பக்கம் தமிழக முதல்வரின் தொலைநோக்கு பார்வையால் இந்தியாவிலேயே தமிழகம் முதல் இடம் பெற்றுள்ளது என உயர்கல்வித்துறை தெரிவித்துள்ள நிலையில் தமிழக பல்கலைக்கழகங்கள் மிகவும் மோசமான நிலையில் இருந்ததாக ஆளுநர் ரவி தெரிவித்துள்ளது பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
 
Edited by Mahendran