வெள்ளி, 26 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Suresh
Last Updated : செவ்வாய், 30 ஜூன் 2015 (13:26 IST)

ஜெயலலிதா 1,51,252 வாக்கு வித்தியாசத்தில் வெற்றி

நடந்து முடிந்த ஆர்.கே. நகர் தொகுதி இடைத்தேர்தலில் தமிழக முதலமைச்சரும், அதிமுக பொதுச்செயலாலருமான ஜெயலலிதா 1,51,252  வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார்.
 

 

 
ஆர்.கே. நகர் இடைத்தேர்தல் வாக்கு எண்ணிக்கை  ராணி மேரி கல்லூரியில் இன்று காலை 8 மணிக்கு தொடங்கியது. தொடக்கம் முதலே ஜெயலலிதா முன்னிலை பெற்று வந்தார்.
 
இந்நிலையில், ஜெயலலிதா1,60,921 வாக்குகளைப் பெற்று, 1,51,252  வாக்கு வித்தியாசத்தில் வெற்றி பெற்றுள்ளார். இவரை எதிர்த்துப் போட்டியிட்ட மகேந்திரன் 9,669 வாக்குகளை மட்டுமே பெற்றார்.

டிராபிக் ராமசாமி டெப்பாசிட்டை இழந்தார். இந்த வெற்றியை அதிமுக தொண்டர்கள் உற்சாகமாகக் கொண்டாடி வருகின்றனர்.

இதைத் தொடர்ந்து ஜெயலலிதா இன்று மாலை 4 மணியளவில் சட்டமன்ற உறுப்பினராகப் பதவியேற்பார் என்று தகவல்கள் வெளியாகியுள்ளன.
 
கடந்த 2011 சட்டமன்ற தேர்தலில் இத்தொகுதியில் அதிமுக சார்பில் போட்டியிட்ட வெற்றிவேல் 83,777 வாக்குகளும், திமுக சார்பில் போட்டியிட்ட சேகர்பாபு 52,522 வாக்குகளும் பெற்றன.
 
அதே போல் 2014 நாடாளுமன்ற தேர்தலில் அதிமுகவின் வெங்கடேஷ் பாபு 74,760 வாக்குகளும், திமுகவின் கிரிராஜன் 48,301 வாக்குகளும் பெற்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.