Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

ஆர்.கே.நகரில் கங்கை அமரன். பாஜக அதிகாரபூர்வ அறிவிப்பு


sivalingam| Last Modified வெள்ளி, 17 மார்ச் 2017 (21:57 IST)
ஜெயலலிதாவின் தொகுதியான சென்னை ஆர்.கே.நகரில் அவருடைய மறைவின் காரணமாக வரும் ஏப்ரல் 12ஆம் தேதி இடைத்தேர்தல் நடைபெறவுள்ளது. இந்த தேர்தலில் டிடிவி தினகரன், மதுசூதனன், மருது கணேஷ் ஆகியோர் போட்டியிடுகின்றனர்.


 


இந்நிலையில் பாஜக சார்பில் கங்கை அமரன் போட்டியிடுவார் என்று கூறப்பட்டு வந்த நிலையில் சற்றுமுன்னர் கங்கை அமரன் பாஜக வேட்பாளராக அதிகாரபூர்வமாக அறிவிக்கப்பட்டுள்ளார். எனவே ஆர்.கே.நகரில் அதிமுக சசிகலா, அதிமுக ஓபிஎஸ், திமுக, தேமுதிக, பாஜக என ஐந்து முனை போட்டி உறுதியாகியுள்ளது.

கடந்த நாடாளுமன்ற தேர்தலின்போது பாஜகவில் இணைந்த கங்கை அமரன், தன்னுடைய பண்ணை வீட்டை மிரட்டி கைப்பற்றியது சசிகலா குடும்பத்தினர்கள் தான் என்பதை சமீபத்தில் பகிரங்கமாக குற்றஞ்சாட்டினார். தனது சொந்த பகையை தீர்த்து கொள்வதற்காகவே அவர் இந்த தேர்தலில் போட்டியிடுவதாக கூறப்படுகிறது.


இதில் மேலும் படிக்கவும் :