Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

அஸ்வின் விக்கெட் எடுத்தா மட்டும் இந்தியன், விவசாயிகள் போராடினால் தமிழர்களா? நிருபருக்கு சூடு வைத்த ஆர்ஜே பாலாஜி


sivalingam| Last Modified புதன், 12 ஏப்ரல் 2017 (21:25 IST)
பொதுவாக காமெடி நடிகர்கள் சமுக சேவையில் விருப்பம் இல்லாமல் தான் உண்டு தனது வேலை உண்டு என்று இருப்பார்கள். ஆனால் இவர்களில் ஆர்ஜே பாலாஜி கொஞ்சம் வித்தியாசமானவர்.


 சென்னை வெள்ளம், ஜல்லிக்கட்டு, நெடுவாசல், மற்றும் தற்போது விவசாயிகள் போராட்டம் ஆகியவற்றுக்கு குரல் கொடுத்து வருகிறார். ஜல்லிக்கட்டு விவகாரத்தின்போது புதுவை கவர்னர் கிரண்பேடியையே ஒரு விவாதத்தில் மடக்கியவர் என்பது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் இன்று ஆர்ஜே பாலாஜி ஆங்கில ஊடகம் ஒன்றில் விவசாயிகளின் டெல்லி போராட்டம் குறித்த விவாதத்தில் கலந்து கொண்டார். அப்போது அந்த ஊடகத்தின் நிருபர் 'தமிழக விவசாயிகள்' என்று ஆரம்பித்தபோது குறுக்கிட்ட ஆர்ஜே பாலாஜி, ‘‘சார் மன்னிக்கவும், அவர்கள் தமிழகத்தை சார்ந்தவர்கள் தான். ஆனால் இந்திய விவசாயிகள் என்று இடைமறித்தார்.

மேலும் 'கிரிக்கெட்டில் அஷ்வின் சாதனை படைக்கும் போது மட்டும் ஏன் இந்திய கிரிக்கெட் வீரர் என்று சொல்கிறீர்கள். அப்போது அவர் தமிழனாக தெரியவில்லையா, இவர்களை இந்திய விவசாயிகளாக பாருங்கள், அவர்கள் சொல்வதை கொஞ்சமாவது காது கொடுத்து கேளுங்கள்’’ என நிருபரை கடிந்து கொண்டார். இதனால் நிருபர் வாயடைத்து போனார் என்பதை சொல்லவும் வேண்டுமா?


இதில் மேலும் படிக்கவும் :