Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

சசிகலாவின் சீராய்வு மனுவும் சாதகமாகாது: அட்டர்னி ஜெனரல்


Abimukatheesh| Last Updated: செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (19:10 IST)
சசிகலாவுக்கு எதிராக சொத்து குவிப்பு வழக்கில் வழங்கப்பட்ட தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம் என அதிமுக துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார். சசிகலா தரப்பினர் சீராய்வு மனு தாக்கல் செய்தாலும் அது அவருக்கு சாதகமாக அமையாது என்று முன்னாள் அட்டர்னி ஜெனரல் கருத்து தெரிவித்துள்ளார்.

 

 
சசிகலா வழக்கில் வெளியான உச்ச நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து மேல்முறையீடு செய்வோம். ஆட்சி அமைக்க ஆளுநர் விரைவில் அழைப்பார். ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுவிட்டார். அவரால் முதல்வராக முடியாது, என்று அதிமுக துணை சபாநாயகர் தம்பிதுரை கூறினார்.
 
தற்போது இதுகுறித்து முன்னாள் அட்டர்னி ஜெனரல் சோலி சொரப்ஜி கருத்து இன்றை தெரிவித்துள்ளார். அதில் அவர் கூறியதாவது:-
 
இந்த வழக்கில் சசிகலா தரப்பினர் சீராய்வு மனு தாக்கல் செய்தாலும் அது அவருக்கு சாதகமாக அமையாது. இதனால் உச்ச நீதிமன்றம் தீர்ப்புப்படி அது சிறை தண்டனை அனுபவித்தே ஆக வேண்டும், என்று கூறியுள்ளார்.
 


இதில் மேலும் படிக்கவும் :