1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sinoj
Last Updated : வெள்ளி, 2 ஏப்ரல் 2021 (17:18 IST)

தேர்தல் பிரச்சாரம் முடிந்தபின் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள்…

.

தமிழகத்தில் தேர்தல் முடிந்த பின்னர் அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

தமிழகத்தில் வரும் ஏப்ரல்  6 ஆம் தேதி சட்டமன்றத் தேர்தல் வரவுள்ளது. இதையொட்டி அனைத்துக் கட்சிகளும் தீவிரப் பிரச்சாரம் மேற்கொண்டுவருகின்றனர். மே 2 ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறிவித்துள்ளது.

இந்நிலையில் தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் வரும் 4 ஆம் தேதி இரவு 7 மணிக்கு முடிவடையும் நிலையில், தேர்தல் முடிந்த பின்னர் அரசியல் கட்சிகள் பின்பற்ற வேண்டிய கட்டுப்பாடுகள் குறித்து தேர்தல் ஆணையம் உத்தரவு பிறப்பித்துள்ளது.

அதில், தமிழகத்தில் தேர்தல் பிரசாரம் வரும்  4 ஆம் தேதி இரவு 7 மணிக்கு முடிவடைகிறது. அதன்பிறகு தேர்தல் சம்பந்தமான பொதுக்கூட்டமும் ஊர்வலமும் நடத்தக்கூடாது.

தேர்தல் சம்பந்தமாக சினிமா திரையரங்குகள், தொலைக்காட்சிகள், அல்லது வேறுசாதனங்கள் மூலமாக பிரசாரம் கூடாது. இசை நிகழ்ச்சிகள் மூலமாகவும், பொழுதுபோக்கு நிகழ்ச்சிகள் மூலமாக பொதுமக்களைக் கவரும் வகையில் பிரசாரம் செய்யக்கூடாது. இவை மீறப்பட்டால் 2 ஆண்டுகள் தண்டனை மற்றும் அபராதம் விதிக்கப்பட்டும்.

வரும்  4 ஆம் தேதி இரவு 7 மணிக்கள் ஒரு சட்டமன்றத் தொகுதியில் வாக்காளராக இல்லாத  வெளியாட்கள் அத்தொகுதியை விட்டு வெளியேற வேண்டும்.

குறிப்பிட்ட தொகுதியின் சட்டமன்ற உறுப்பினர் அல்லது நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தால் அவரை வெளியே செல்லுமாறு கட்டாயப்படுத்தக்கூடாது. அவர்கள் பிரசாரம் செய்யக்கூடாது உள்ளிட்ட உத்தரவுகளை வெளியிட்டுள்ளது.