வெள்ளி, 19 ஏப்ரல் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By anandakumar
Last Modified: செவ்வாய், 28 மே 2019 (18:24 IST)

குகை வழிப்பாதைக்கு பதில், கிணறு தோண்டிய ரயில்வே துறையால் மக்கள் அவதி!

கரூர் மாவட்டம், கிருஷ்ணராயபுரம் வட்டம், குளித்தலை சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட இலாலாபேட்டை பகுதி என்றாலே ரயில்வே கேட் பிரச்சினையான ஊர் என்பார்களே அந்த ஊர் தானா ? என்பார்கள். அந்த அளவிற்கு கடந்த 10 வருடங்களாக பூட்டப்பட்ட, ரயில்வே கேட்டினை திறக்கவும், மேம்பாலம் கட்டப்பட்டது ஊருக்காக அல்ல, பைபாஸ் ரோட்டிற்காக என்று கூறி பல்வேறு ஆர்பாட்டங்களும், போராட்டங்களும் நடத்தப்பட்டன. 
2009 ம் ஆண்டு மூடப்பட்ட இந்த ரயில்வே கேட் ஆனது 2015 ம் ஆண்டு கரூர் மாவட்ட ஆட்சியரான ஜெயந்தி அவர்களது கையினால் மீண்டும் திறக்கப்பட்டது. ஆனால், ஆங்காங்கே இந்தியா முழுவதும் ரயில்வே கேட்டுகள் மூடப்பட்டு வருவதாகவும், அதற்காக குகை வழிப்பாதை கட்டித்தருவதாகவும், அந்த குகை வழிப்பாதையில் நகர பேருந்துகள், நள்ளிரவில் கூட மின்சார வசதியுடன் அடங்கிய அனைத்து வசதிகளையும் செய்து தருவதாக கூறி, அந்த லாலாபேட்டை ரயில்வே கேட்டினை சுற்றியே சுரங்க பாதையாக குகை வழிப்பாதை தோண்டப்பட்டது. 
 
இதில் வேடிக்கையான விஷயம் என்ன வென்றால், குகை வழிப்பாதை தோண்டும் போதே ஊற்றுகள் மூலம் நீர் வந்தன. ஏனென்றால் அருகிலேயே காவிரி ஆறு, தென்கரை மருதாண்டான் வாய்க்கால் மட்டுமில்லாமல் குகைவழிப்பாதை தோண்டுமிடத்தில் இருந்து சுமார் 5 மீட்டர் தொலைவிலேயே, ஒரு கிளை வாய்க்கால் என்று ஆங்காங்கே வாய்க்கால்களை கொண்ட இடத்தில் ஒரு குகை வழிப்பாதை அமைக்கப்பட்டது. அந்த குகை வழிப்பாதை முழுமையாக கட்டி முடிக்காத நிலையில், திடீரென்று கடந்த 6 மாதங்களுக்கு முன்னர் எந்த வித முன்னறிவிப்புமின்றி லாலாபேட்டை ரயில்வே கேட் மூடப்பட்டது. பின்னர் ரயில்வே கேட் கேளாறு என்றும் சில தினங்களில் திறக்கப்படும் என்றும், ரயில்வே நிர்வாகத்தினரால் அறிவுறுத்தப்பட்டிருந்தது.
 
இந்நிலையில் இன்று திறப்பார்கள், நாளை திறப்பார்கள் என்று எதிர்பார்த்த நிலையில், தேர்தல் வருவதற்கு முன்னர் தேர்தலை புறக்கணிப்பதாக அக்கிராம பகுதி மக்கள் தெரிவித்தனர். லாலாபேட்டை ரயில்வே கேட் என்றால், ஒரு கிராமம் மட்டுமல்ல, கள்ளப்பள்ளி, சிந்தலவாடி, கருப்பத்தூர், பிள்ளபாளையம் என்கின்ற 4 வருவாய் கிராமங்களையும், கொம்பாடிப்பட்டி, வல்லம், கொடிக்கால்தெரு, மத்திப்பட்டி, புணவாசிப்பட்டி, மகிளிப்பட்டி, பாலப்பட்டி உள்ளிட்ட 50 க்கும் மேற்பட்ட கிராமங்களை கொண்டது.
 
இந்த கிராமத்தில் படிக்கும் மாணவ, மாணவிகள் பேருந்துகளை பிடிக்க வேண்டுமென்றால் பைபாஸ் சாலைக்கு சென்று தான் (காவிரி கரையோரம் அமைந்துள்ள) பேருந்துகளை பிடிக்க வேண்டும், ஏனென்றால் பேருந்துகள், இந்த லாலாபேட்டை ஊருக்குள் வரவேண்டுமென்றால் பைபாஸ் மேம்பாலம் சுற்றி வருவதற்கு அப் அண்ட் டவுன் சுமார் 6 கீ.மீட்டர் தொலைவு என்பதினால் எந்த ஒரு பேருந்தும் ஊருக்குள் வருவதில்லை, இந்நிலையில், இந்த பகுதி வாகனங்களும் சுற்றி தான் செல்ல வேண்டுமென்ற நிலையில், தேர்தல் புறக்கணிப்பினை கவனத்தில் கொண்டு, வாக்களிப்பது அனைவரது கடமை என்று மாவட்ட நிர்வாகத்தினால் அறிவுறுத்தப்பட்ட நிலையில், அனைவரும் அவர்களது போராட்டத்தினை விளக்கிக் கொண்டு வாக்களித்தனர். 
 
இந்நிலையில் தேர்தல் முடிந்தும் இன்றுவரை லாலாபேட்டை ரயில்வே கேட் திறக்கபடாமல், சடலங்களை சுடுகாட்டிற்கு எடுத்து செல்ல வேண்டுமென்றால் கூட, ரயில்வே கேட் மீது தூக்கி வைத்து தான் செல்ல வேண்டுமென்ற நிலைக்கு செல்லும் அவலநிலையில், இரவு பகலாக அந்த குகை வழிப்பாதையில் சுமார் 3 அடி தூரம் தண்ணீர் ஊற்றாக மாறி, தத்தளித்து தான் இரு சக்கர வாகனம் மற்றும் நான்குசக்கர வாகனங்களும் செல்லும் நிலையில் உள்ளது, மேலும், எந்த ஒரு பேருந்தும் உள்ளே கூட நுழைய முடியாத அளவிற்கு குறுகலான அமைப்பு மூலம் ஒப்பந்ததாரர்கள் கட்டி இருப்பதாகவும், மின்விளக்கு வசதிகள் கூட இல்லாமல், இரவு நேரத்தில் இந்த குகை வழிப்பாதையில் மிகுந்த அச்சத்துடன் தான் பயணம் செய்வது போல உள்ளதாகவும், மனிதன் இறந்து விட்டால் கூட இந்த குகை வழிப்பாதை இடிப்பதாகவும், ஆகையால் ரயில்வே கேட் மீது தூக்கி வைத்து பின்பு இறுதி யாத்திரையில் ஈடுபடுவதாகவும் கூறியுள்ள அவர்களுக்கு கரூர் மாவட்ட நிர்வாகம் தான் பதில் சொல்ல வேண்டுமென்று மிகுந்த வேதனையுடன் அப்பகுதி பொதுமக்கள் தெரிவித்துள்ளனர். 
 
மேலும், குளித்தலை சட்டமன்ற தொகுதியில் வரும் இந்த லாலாபேட்டை ரயில்வே கேட், அந்த தொகுதி எம்.எல்.ஏ ராமர் தி.மு.க வினை சார்ந்தவர் என்பதினாலும், தற்போது அந்த சட்டமன்ற தொகுதியும் பெரம்பலூர் பாராளுமன்றத்திற்கு சென்றுள்ளதால் அரசியல் ரீதியாக காய்கள் நகர்த்தப்படுவதாகவும் பொது நல ஆர்வலர்கள் கருத்து தெரிவித்துள்ளனர். இந்நிலையில் வாக்குகள் கேட்டு மட்டும் தி.மு.க எம்.எல்.ஏ ராமர் வந்ததாகவும், இந்த பிரச்சினை குறித்து அவர் மாவட்ட நிர்வாகத்திடம் வற்புறுத்துமாறும் பொதுமக்கள் சார்பில் கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளதோடு, இந்த ரயில்வே கேட் பிரச்சினையை, பெருமளவிற்கு போராட்டக்களத்திற்கு உட்படுத்தாமல், உடனே சரிசெய்ய வேண்டுமென்றும் கோரிக்கை விடுத்துள்ளனர். 
 
மேலும், இந்த ஊற்று நீர் அவ்வப்போது அக்னி வெயிலையும் பாராமல் ஊற்றி வருவதால் கொசுக்கள் பெருகி பல்வேறு நோய்கள் ஏற்படும் அபாய சூழலும் ஏற்பட்டு வருவதாக குற்றம் சாட்டியுள்ளனர்.