செவ்வாய், 7 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: வியாழன், 19 மே 2022 (11:05 IST)

கல்குவாரி விபத்து - 5வது நபர் சடலமாக மீட்பு; 6வது நபரை தேடும் பணி தீவிரம்!

திருநெல்வேலி கல்குவாரி விபத்தில் தேடப்பட்டு வந்தவர்களில், ஐந்தாவது நபர் சடலமாக மீட்கப்பட்டார். மேலும், ஆறாவது நபரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்று வருகிறது.

 
திருநெல்வேலி மாவட்டம் பொன்னாக்குடி அருகே உள்ள அடைமிதிப்பான்குளம் குவாரியில் கடந்த 14 ஆம் தேதி சனிக்கிழமை இரவில் திடீர் பாறைச்சரிவு ஏற்பட்டது. இதில் ஆறு தொழிலாளர்கள் கல்குவாரிக்குள் சிக்கி கொண்ட நிலையில், மறுநாள் ஞாயிற்றுக்கிழமை காலை ஹிட்டாச்சி ஆபரேட்டர்கள் முருகன், விஜய் இருவர் உயிருடன் மீட்கப்பட்டனர்.
 
மாலையில் மூன்றாவதாக ஆப்பரேட்டர் செல்வம் மீட்கப்பட்டார். ஆனால் அவர் மருத்துவமனை கொண்டு செல்லும் வழியில் உயிரிழந்தார். இரண்டாம் நாள், திங்கட்கிழமை காலையில் தேசிய பேரிடர் மீட்பு படையினர், தேடத் தொடங்கிய நிலையில், நீண்ட நேர தேடுதலுக்கு பின் இரவில் ( லாரி கிளீனர் ) முருகனை சடலமாக மீட்டனர். இதனால் கல்குவாரி விபத்தில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 2ஆக உயர்ந்தது.
 
தொடர்ந்து செவ்வாய்க்கிழமை மதியம் ஐந்தாவது நபரின் உடல், பாறை குவியலுக்குள் இருக்கும் இடம் அடையாளம் காணப்பட்டது. மீட்கப்பட்ட நபரின் உடையில் இருந்து எடுக்கப்பட்ட ஓட்டுனர் உரிமம், மணிபார்ஸ், அவர் அணிந்திருந்த உடை இவற்றை கொண்டு உறவினர்கள் சடலமாக மீட்கப்பட்டவர் செல்வகுமார் என உறுதி செய்தனர். கல்குவாரியில் சிக்கி இருக்கும் ஆறாவது நபர் ராஜேந்திரனை, மீட்கும் பணி ஐந்தாவது நாளாக இன்று காலை தொடர்ந்து நடைபெற்று வருகிறது.