மக்கள் கோரிக்கையை ஏற்று ஓ.பி.எஸ்.க்கு ஆதரவு: ஊத்தங்கரை எம்.எல்.ஏ.


Abimukatheesh| Last Updated: வியாழன், 9 பிப்ரவரி 2017 (16:56 IST)
தொகுதி மக்கள் கோரிக்கையை ஏற்று ஓ.பன்னீர்செல்வத்துக்கு ஆதரவு தெரிவித்தாக ஊத்தங்கரை பெண் எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம் நாகராஜ் கூறியுள்ளார்.

 


இதுகுறித்து ஊத்தங்கரை எம்.எல்.ஏ. மனோரஞ்சிதம் நாகராஜ் கூறியதாவது:-

கடந்த 2 மாதங்களில் முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம் மக்களின் தேவைகளை அறிந்து அதனை உடனுக்குடன் நிறைவேற்ற அதிரடி நடவடிக்கைகளை எடுத்தார். வர்தா புயலில் தொடங்கி, ஜல்லிக்கட்டு நடத்த அவசர சட்டம் போன்ற அவரது செயல்களால் மக்கள் மனதில் இடம்பிடித்துள்ளார்.

எனக்கு வாக்களித்து எம்.எல்.ஏ.வாக்கிய தொகுதி மக்களின் கோரிக்கையை ஏற்று இந்த முடிவை எடுத்துள்ளேன். வரும் காலங்களில் ஓ.பன்னீர்செல்வம் தமிழகத்தில் மக்களுக்கு தேவையான வளர்ச்சி பணிகளை செய்வார் என்பதால் அவருக்கு எனது ஆதரவை தெரிவித்துள்ளேன், என்றார்.

webdunia

இதில் மேலும் படிக்கவும் :