Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

செய்தியாளர்களை தாக்கிய சசிகலா தரப்பினர்: கூவத்தூர் நட்சத்திர விடுதி முன்பு போராட்டம்


Abimukatheeesh| Last Updated: செவ்வாய், 14 பிப்ரவரி 2017 (21:21 IST)
சசிகலா ஆதரவு எம்.எல்.ஏ.க்கள் தங்கியிருக்கும் விடுதிக்குள் சென்ற செய்தியாளர்கள் தாக்கப்பட்டதால், செய்தியாளர்கள் விடுதி முன் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர்.

 

 
சசிகலா நேற்று இரவு முதல் கூவத்தூரில் தங்கி உள்ளார். செய்தியாளர்களை சசிகலா சந்திக்க இருப்பதாக, செய்தியாளர்களை உள்ளே அழைத்துள்ளனர். ஆனால் ஒளிப்பதிவாளர்களை மட்டும் அனுமதி அளித்துள்ளனர். 
 
குரல் பதிவுக்காக கையில் மைக்குடன் சென்றவர்களை சசிகலா தரப்பினர் தாக்கியுள்ளனர். இதனால் செய்தியாளர்கள் அவர்கள் பாதுகாப்பு கோரி போராட்டத்தில் ஈடுப்படுள்ளனர். மேலும் சில அதிமுக நிர்வாகிகளிடம் இதுகுறித்து தெரிவித்துள்ளனர்.
 
அதற்கு அவர்கள் தரப்பில் மன்னிபு கேட்கப்பட்டதாக கூறப்படுகிறது. விடுத்திக்குள் அழைத்த அவர்களே, தாக்கியிருப்பது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. நேற்று மர்ம நபர்கள் சிலர் அனுமதி அளிக்காத காரணத்தினால் போராட்டம் நடத்தினர்.
 
இன்று தாக்கப்பட்ட காரணத்தினால் போராட்டத்தில் ஈடுப்பட்டுள்ளனர். இதன்மூலம் சிறிது நேரம் காவல்துறையினர் கட்டுப்பாட்டில் இருந்த கூவத்தூர் நட்சத்திர விடுதி தற்போது மீண்டும் சசிகலா தரப்பினர் கட்டுப்பாட்டில் சென்றுள்ளது தெரிய வந்துள்ளது.


இதில் மேலும் படிக்கவும் :