திங்கள், 23 டிசம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By sinoj
Last Updated : செவ்வாய், 13 ஜூலை 2021 (17:21 IST)

நீட் தேர்வின் தாக்கம் குறித்து நாளை அறிக்கை தாக்கல் !

தமிழக அரசு நீட் தேர்வின் தாக்கம் குறித்து ஆய்வு செய்ய நியமிக்கப்பட்ட குழு நாளை முதல்வர் ஸ்டாலினிடம் அறிக்கை தாக்கல் செய்யவுள்ளது.

தமிழகத்தில் மருத்துவ மாணவர் சேர்க்கையில் நீட் என்ற நுழைவுத் தேர்வின் பாதிப்பை ஆய்வு செய்ய நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான 8 பேர் கொண்ட உயர்நிலைக் குழுவை தமிழக அரசு சமீபத்தில் நியமித்தது.

மத்திய அரசின் நீட் தேர்வின் பாதிப்பு குறித்து மாணவர்கள், பெற்றோர்கள் உள்ளிட்ட 89,342 பேர் தங்கள் கருத்துகளைத் தெரிவித்துள்ளனர்.

இதனடிப்படையில்  நீதிபதி ஏ.கே.ராஜன் தலைமையிலான இக்குழு ஆலோசனை மேற்கொண்டது.  இந்நிலையில் ஏ.கே. ராஜன் குழுவின் அறிக்கையை நாளை முதல்வரிடம் வழங்கவுள்ளனர்.

இதனடிப்படையில் தமிழக அடுத்த கட்ட நடவடிக்கை எடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.