1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By siva
Last Updated : வியாழன், 13 மே 2021 (15:23 IST)

ரெம்டெசிவிர் மருந்து விற்பனையை நேரு ஸ்டேடியத்திற்கு மாற்ற முடிவு!

தமிழகத்தில் கொரோனா வைரஸ் பாதிப்பு காரணமாக தினமும் ஆயிரக்கணக்கானோர் இருந்துவரும் நிலையில் கொரோனா வைரசால் பாதிக்கப்பட்டவர்களுக்கு ரெம்டெசிவிர் மறந்து பற்றாக்குறை இருந்து வருகிறது 
 
ரெம்டெசிவிர் மருந்தை வாங்குவதற்காக கீழ்ப்பாக்கம் அரசு மருத்துவமனையில் தினமும் நூற்றுக்கணக்கானோர் குவிந்து வருவதால் அங்கு பெரும் பரபரப்பு ஏற்பட்டு உள்ளது. மேலும் தனிமனித இடைவெளியின்றி அங்கு ரெம்டெசிவிர் மருந்துக்காக பலர் காத்திருப்பதால் மருந்து வாங்க காத்திருப்பவர்களுக்கு கொரோனா தொற்று பரவும் அபாயம் இருப்பதாக கூறப்பட்டது
 
இந்த நிலையில் ரெம்டெசிவிர் மருந்து வாங்க வருபவர்களின் பாதுகாப்பை கணக்கில் கொண்டு ரெம்டெசிவிர் மருந்து விற்பனை மையத்தை கீழ்பாக்கம் அரசு மருத்துவமனையில் இருந்து நேரு ஸ்டேடியத்திற்கு மாற்ற தமிழக அரசு முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளிவந்துள்ளன. இந்த தகவல் ரெம்டெசிவிர் மருந்து வாங்க வரும் பொதுமக்களுக்கு மிகுந்த மகிழ்ச்சியை அளித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது