வியாழன், 23 ஜனவரி 2025
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Siva
Last Updated : புதன், 31 ஜூலை 2024 (15:48 IST)

பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமின்.. ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலை முடக்க நீதிபதி உத்தரவு..!

சவுக்கு சங்கர் கூறிய சர்ச்சைக்குரிய பேட்டியை ஒளிபரப்பிய ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலின் உரிமையாளர் பெலிக்ஸ் ஜெரால்ட் என்பவர் சமீபத்தில் கைது செய்யப்பட்ட நிலையில் அவருக்கு தற்போது ஜாமீன் வழங்கிய நீதிபதி உத்தரவு பெற்றுள்ளார்.
 
சவுக்கு சங்கரின் நேர்காணலை ஒளிபரப்பியதாக கடந்த சில மாதங்களுக்கு முன் கைது செய்யப்பட்ட ரெட் பிக்ஸ் ஆசிரியர் பெலிக்ஸ் ஜெரால்டுக்கு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதி ஜாமீன் வழங்கியுள்ளார். மேலும் ரெட் பிக்ஸ் யூடியூப் சேனலை முடக்கவும் அவர் உத்தரவிட்டு உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
முன்னதாக கடந்த மாதம் அவரது ஜாமின் மனு விசாரணைக்கு வந்தபோது சவுக்கு சங்கர் கூறிய சர்ச்சைக்குரிய கருத்துக்களை எடிட் செய்திருக்கலாமே என ஃபெலிக்ஸ்க்கு கேள்வி கேட்ட நீதிபதி அவருடைய ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தார் என்பது குறிப்பிடத்தக்கது.
 
காவல் துறையில் உள்ள பெண் அதிகாரிகளை ஆபாசமாக பேசிய வழக்கில் சவுக்கு சங்கர் கைது செய்யப்பட்ட நிலையில் இதே வழக்கில் அவரை பேட்டி எடுக்க யூடியூப் சேனல் நிர்வாகி ஃபெலிக்ஸ் கைது செய்யப்பட்ட நிலையில் தற்போது பெலிக்ஸ் ஜெரால்டுக்கு ஜாமீன் கிடைத்துள்ளது.
 
Edited by Siva