செவ்வாய், 26 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By
Last Modified: வியாழன், 28 ஜூன் 2018 (10:11 IST)

பிரபல தமிழ்நாடு வங்கிக்கு ரூ.6 கோடி அபராதம் விதித்தது ரிசர்வ் வங்கி

தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி பங்குகள் ஒதுக்கீட்டு விதிமுறையை மீறி செயல்பட்டத்திற்காக ரிசர்வ் வங்கி ரூ.6 கோடி அபராதம் விதித்துள்ளது.
 
தூத்துக்குடியை தலைமையிடமாக கொண்டு செயல்பட்டு வருகிறது தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி. இந்த வங்கி, ரிச்ர்வ் வங்கி பிறப்பித்த வெளிநாடு வாழ் முதலீட்டாளர்களுக்கு போனஸ் பங்குகளை ஒதுக்கீடு செய்யும் விதிமுறைகளுக்கு முரணாக செயல்பட்டதாக குற்றம்சாட்டப்பட்டது.
 
இது குறித்து ரிசர்வ் வங்கி அதிகாரிகள் விசாரணை நடத்தினர். அந்த விசாரணையில், தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கி விதிமுறையை மீறி செயல்ப்பட்டது தெரியவந்தது.
 
இதனால் ஒழுங்குமுறை சட்டம்1949-ல் உள்ள பிரிவுகளின் கீழ் ரிசர்வ் வங்கி, தமிழ்நாடு மெர்க்கண்டைல் வங்கிக்கு ரூ.6 கோடி அபராதம் விதித்துள்ளது.