வியாழன், 21 நவம்பர் 2024
  1. செய்திகள்
  2. செய்திகள்
  3. த‌மிழக‌ம்
Written By Sugapriya Prakash
Last Modified: புதன், 15 செப்டம்பர் 2021 (10:51 IST)

தடுப்பூசி போட்டவர்களுக்கு மட்டும் தான் இனி ரேஷன்!!

ரேஷன் கடைகளுக்கு பொருட்களை வாங்க வரும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவருக்கும் தடுப்பூசி அவசியம் என அறிவிப்பு. 

 
கொரோனாவை கட்டுப்படுத்த தமிழக அரசு பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறது. இதில் முதன்மையாக அனைவரும் கட்டாயம் தடுப்பூசி போட்டுக்கொள்ள வேண்டும் என அறிவுறுத்தப்பட்டு சிறப்பு முகாம்கள் மூலம் தடுப்பூசி போடப்பட்டு வருகிறது. இதற்காக கோவாக்சின், கோவிஷீல்டு தடுப்பூசிகள் பெருமளவில் பயன்படுத்தப்படுகிறது. 
 
அதோடு வாரம் ஒரு முறை தமிழகம் முழுவதும் தடுப்பூசி மெகா கேம்ப் நடத்தப்பட்டு தடுப்பூசி போடப்படுகிறது. கடந்த வாரம் நடத்தப்பட்ட இந்த முகாம் மூலம் பலர் பயன் அடைந்தததால் வரும் 17 ஆம் தேதி மீண்டும் சிறப்பு மெகா முகாம் நடத்தப்படுகிறது. 
 
தடுப்பூசி போட்டுக்கொள்வது அவசியம் என்ற அடிப்படையில் சேலம் மாவட்டத்தில் இன்று முதல் ரேஷன் கடைகளுக்கு பொருட்களை வாங்க வரும் குடும்ப அட்டைதாரர்கள் அனைவரும் தடுப்பூசி அவசியம் செலுத்தியிருக்க வேண்டும் என உத்தரவிடப்பட்டுள்ளது.