Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine
Widgets Magazine

நித்தியானந்தாவுக்காக அடாவடியில் இறங்கிய நடிகை ரஞ்சிதா


Abimukatheesh| Last Updated: புதன், 17 மே 2017 (15:08 IST)
நித்தியானந்தா பெயரில் சென்னை பல்லாவரத்தில் ரூ.30 கோடி மதிப்புள்ள நிலத்தை நடிகை ரஞ்சிதா மற்றும் அவரது கோஷ்டியினர் ஆக்கிரமித்துள்ளனர்.

 

 
சென்னை பல்லாவரத்தில் உள்ள 2 ஏக்கர் அரசு புறம்போக்கு நிலத்தில் கிருஷ்ணன் என்பவர் 40 ஆண்டுகளுக்கு மேலாக அங்கு வசித்து வருகிறார். இந்நிலையில் ராமநாதம் என்பவர் கிருஷ்ணன் வசிக்கும் இடத்திற்கு உரிமை கோரி நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்தார்.
 
ஆனால் அதற்கான உரிய ஆவணங்கள் இல்லாததால் வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது. இதனிடையே நடிகை ரஞ்சிதா மற்றும் நித்தியானந்தா சீடர்கள் கிருஷ்ணனிடம் இது ராமநாதன் மகளுக்கு சொந்தமான இடம், அவர் இந்த இடத்தை எங்கள் மடத்துக்கு எழுதிவிட்டார் என கூறியுள்ளார்.
 
இதைக்கேட்டு கிருஷ்ணனும் அவரது குடும்பத்தினரும் அதிர்ந்து போயுள்ளனர். இதையடுத்து அதே குடியிருப்பு வளாகத்தில் ஒரு சிறிய குடிசை அமைத்து நித்தியானந்தா படத்துக்கு பூஜை பொட்டு ஆக்கிரமித்துள்ளனர்.
 
இதேபோல் நித்தியானந்தா கோஷ்டி தமிழகத்தில் பல இடங்களில் அடாவடியில் ஈடுப்பட்டு அடிவாங்கி ஓடுவது வழக்கம்.   


இதில் மேலும் படிக்கவும் :